இமாச்சல பிரதேச அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய நல்ல நாள் பார்க்கும் காங்கிரஸ் முதல்வர்

 
சுக்விந்தர் சிங் சுகு

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கு நல்ல நாள் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதையடுத்து அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 11ம் தேதியன்று இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகுவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியையும் பதவியேற்றனர். சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக பதவியேற்றது முதல் அமைச்சராக விரிவாக்கம் தொடர்பாக பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேசமயம் பல்வேறு காரணங்களால் அமைச்சரவை விரிவாக்கம் பல்வேறு காரணங்களால் தள்ளி போகுகிறது.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவது, அம்மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகர் இல்லாதது உள்பட பல்வேறு காரணங்களால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிபோகிறது. இந்நிலையில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தனது பட்டியலை கட்சி தலைமைக்கு சமர்ப்பித்துள்ளார். அதேசமயம் போட்டி முகாம்களும் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவிகளை கோரியுள்ளன. முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுடன் சேர்த்து மொத்தம் 12 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம் பெற முடியும். ஆகையால் போட்டி முகாம்கள் பரிந்துரைத்த அனைவருக்கும் காங்கிரஸ் மேலிடத்தால் அமைச்சர் பதவி வழங்க முடியாது.

முகேஷ்  அக்னிஹோத்ரி

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் நிறைவடைந்தபிறகு, ஜனவரி 7ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை என்றால், அமைச்அமைச்சரவை விரிவாக்கம் மேலும் தள்ளிபோகும். ஏனென்றால் கவர்னர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாநிலத்தில் இருக்க மாட்டார். இந்த சூழ்நிலையில், சுக்விந்தர் சிங் சுகு தனது அமைச்சரவையை விரிவுப்படுத்த ஒரு நல்ல நாளை பார்க்கிறார் என தகவல். இது தொடர்பாக சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில்,  தாமதம் இல்லை. அமைச்சரவை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதல்வராக உள்ளார்.  ஆம், விரிவாக்கம் கார்டுகளில் உள்ளது. நாங்கள் ஒரு நல்ல நாளை காணும்போது அது (அமைச்சரவை விரிவாக்கம்) செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.