மக்கள் சந்தையில் பொருட்களை வாங்குகிறார்கள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகிறது.. ஜார்க்கண்ட் முதல்வர்

 
ஹேமந்த் சோரன் அரசு ஊழலில் சிக்கியுள்ளது, வளர்ச்சி பணிகளில் பின்தங்கி உள்ளது.. நட்டா குற்றச்சாட்டு

மக்கள் சந்தையில் பொருட்களை வாங்குகிறார்கள் ஆனால் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகிறது என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டினார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத் தொடரில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது. சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 81 எம்.எல்.ஏ.க்களில் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்துக்கு ஆதரவாக 48 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது. அவை நடவடிக்கையின் போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை

முன்னதாக, ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் முதல்வர் ஹேமந்த் சோரன் தன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசுகையில் கூறியதாவது: எதிர்க்கட்சி (பா.ஜ.க.) ஜனநாயகத்தை அழித்து விட்டது. சட்டப்பேரவை உறுப்பினர்களின் குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. எங்கள் பலத்தை சபையில் காட்டுவோம். மக்கள் சந்தையில் பொருட்களை வாங்குகிறார்கள் ஆனால் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகிறது.

பா.ஜ.க.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வேட்டையாட (விலைக்கு வாங்க) மற்ற கட்சி முயற்சிக்கிறது. இது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தூண்டியது. மாநிலத்தில் பிளவை உருவாக்கி அச்சத்தை ஏற்படுத்த பா.ஜ.க. விரும்புகிறது. உள்நாட்டுப் போரின் சூழலை உருவாக்க விரும்புகிறார்கள், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கலவரங்களை தூண்ட விரும்புகிறார்கள். ஆனால் இங்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருக்கும் வரை பா.ஜ.க.வின் திட்டம் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.