எடப்பாடி பேரதிர்ச்சி! அப்ரூவர் ஆனாரா ஆறுக்குட்டி?

முன்னாள் எம்.எல்.ஏவும் ஓபிஎஸ் ஆதரவாளருமான ஆறுக்குட்டி அளித்த வாக்மூலத்தால் எடப்பாடி அணியினர் பேரதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கின்றனர்.
கொடநாடு கொலை வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியின் வாக்குமூலம் அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு எதிராக இருப்பதால் இந்த வழக்கில் விரைவில் முக்கிய திருப்பம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. அதிமுக முக்கிய புள்ளிகளின் சொத்து ஆவணங்கள் இந்த சம்பவத்தின் போது கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்தன. இது குறித்து தொடரப்பட்டிருந்த வழக்கில் விசாரணை நிறைவு நிலையை எட்டியிருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் தற்போது மீண்டும் மறுவிசாரணை தொடங்கி நடந்து வருகிறது.
இந்த மறு விசாரணையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரைக்கும் 260க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்திருக்கிறது. சசிகலாவிடமும் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி இடம் பலமுறை விசாரணை நடந்து இருக்கிறது. மேலும் இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்து நிறைவு பகுதியை எட்டி வருகிறது .
அதிமுக தலைமையை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையில் மோதல் முற்றி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்படும் அளவிற்கு சென்றது. இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் யார் இருந்தார்கள்? மர்ம மரணங்களை நிகழ்த்தியது யார்? என்று போலீசார் கண்டுபிடித்து உள்ளார்கள் . இதில் முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியின் வாக்குமூலம் மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது .
இதுதான் இந்த வழக்கில் பரபரப்பான திருப்பத்தை ஏற்படுத்த இருக்கிறது என்கிறார்கள். மேலும், சம்பவம் நடப்பதற்கு முன்பாக சேலத்தில் அதிமுக பிரமுகர்கள் ஒருவரின் வீட்டில் இது தொடர்பான ஆலோசனை நடந்திருக்கிறது . அப்போது ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் மறைந்த கனகராஜ் இடம் இந்த பொறுப்பை ஒப்படைத்த அந்த அதிமுக பெரும்புள்ளி அவருக்கு அட்வான்ஸ் ஆக 5 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார். இதுவும் போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது . இதனால் விரைவில் பரபரப்பான சம்பவங்கள் அதிமுகவில் அரங்கேறும் என்கிறார்கள்.
ஆனால் அது குறித்து ஆறுக் குட்டியோ, விரைவில் எல்லா விஷயங்களையும் மீடியாக்களிடம் பகிர்ந்து பகிர்வேன் என்று மட்டும் சொல்லி இருக்கிறார் .
ஆறு குட்டி ஓபிஎஸ்-க்கு மிக நெருக்கமானவர் என்பதால் அவரது வாக்குமூலம் எடப்பாடி தரப்புக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த விஷயத்தல் எடப்பாடி தரப்பு பேரதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.