முதல் நாளே கற்களை குவித்து வைத்த எடப்பாடி ஆட்கள்! மூன்று நாட்களுக்கு முன்னரே ஆட்களை குவித்த ஓபிஎஸ் டீம்

 
செ

அதிமுக பொதுக்குழுவில் தனது பொருளாளர் பதவியையும் பறித்து அதிமுகவில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறார் என்பதையும், நீதிமன்றத்தின் தீர்ப்பும் தனக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை.  பொதுக்குழு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக தீர்ப்பு அளிக்கப்பட இருக்கும்போதே அது தனக்கு சாதகமாக இருக்காது என்பதை உணர்ந்த ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு சென்று ஆலோசனை நடத்த புறப்பட்டு சென்றார்.   அட்

 ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக அலுவலகத்திற்குள் உள்ளே விடாதபடி அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியே எடப்பாடி ஆதரவு ஆட்கள் காவலுக்கு நின்றார்கள்.   இதனால் இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது.   இரு தரப்பினரும் கற்களை வீசித் தாக்கி கொண்டார்கள்.   திடீரென்று நடந்த சம்பவத்தில் அந்த ராயப்பேட்டை பகுதியில் எங்கிருந்து வந்தது இத்தனை கற்கள்?  ஒரு வீடு கட்டுவதற்கு கூட இவ்வளவு சீக்கிரத்தில் அவ்வளவு கற்களை கொண்டு வந்து விட முடியாது. அவ்வளவு கற்களும் அங்கிருந்து எங்கிருந்து வந்தன?  வானகரத்தில் பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும்போது எடப்பாடி ஆதரவாளர்கள் இத்தனை பேர் ஏன் அதிமுக அலுவலகத்தில் குவிந்து இருக்க வேண்டும்?  அவர்களுக்கு ஓபிஎஸ் வருகை எப்படி முன்கூட்டியே தெரியுமா?  என்ற கேள்விகள் எழுந்தன.  இல்லை இருவருமே முன்கூட்டியே திட்டமிட்டு இந்த செயலை செய்து இருக்கிறார்களா? என்ற கேள்விகளும் இருந்தன.

அதிமுக மோதல்  பொதுக்குழு அன்று திடீரென்றூ நடநத மோதல் அல்ல.  முன்கூட்டியே திட்டமிட்ட தான் இருவரும் செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.   நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்காது என்பதை உணர்ந்த ஓபிஎஸ்,  பொதுக்குழுவிலும் தனக்கு சாதகமாக அமையாது என்பதை உணர்ந்து ஓபிஎஸ் நிச்சயம் அதிமுக அலுவலகத்திற்கு வருவார்.  அதனால் அலுவலகத்தை பூட்டி அவரை உள்ளே விடக்கூடாது என்று முன்கூட்டியே திட்டமிட்டு முதல் நாளே எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறார் எடப்பாடி. இன்னும் சொல்லப்போனால் மூன்று  நாளைக்கு முன்னாடி இருந்தே இரு தரப்பிலும் ஏற்பாடுகளை செய்து வந்திருக்கிறார்கள்.

அட்ம்

ஓபிஎஸ்ஐ அதிமுக அலுவலகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்று ஆதி ராஜாராம்,  தி. நகர் சத்தியா,  வேளச்சேரி அசோக்,  விருகை ரவி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.  இதனால் இவர்கள் தங்களது ஆட்களை திரட்டி கொண்டு வந்து முதல் நாள் இரவு தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் சாலையில் உள்ள கடை மற்றும் வீட்டு மாடிகளில் கற்களை குவித்து தயாராக வைத்திருந்திருக்கிறார்கள் .   அது மட்டுமல்லாமல் ஐந்து நாட்களுக்கு முன்பாகவே அதிமுக அலுவலகத்தை சுற்றி ஆயுதங்களுடன் எடப்பாடி ஆட்கள் சுற்றி வந்தார்கள் என்கிறது ஓபிஎஸ் தரப்பு. 

 இதை தெரிந்து கொண்ட  ஓபிஎஸ் தரப்பு எப்படியும் இதை முறியடித்து அதிமுக அலுவலகத்திற்கு நுழைந்து விட வேண்டும் என்று அவர்களும் முன்கூட்டியே தேனி, ஒரத்தநாடு, மதுரை, தஞ்சை, போன்ற தென் மாவட்டங்களில் இருந்து மூன்று மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆட்களை வரைவழைத்து சென்னையில் தங்க வைத்திருக்கிறார்கள்.   எந்தெந்த வாகனங்களில் வரவேண்டும் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.

அட்ம்க்

 ஓபிஎஸ் வாகனம் காலை 8 மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டதும் அவருக்கு முன்னே சென்ற வாகனங்களில் உருட்டுக் கட்டைகள்,  ஒன்னரை ஜல்லிகள் ஏற்றப்பட்டு செல்லப்பட்டு இருக்கின்றன.  அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் வருவதற்கு முன்பாகவே அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்டனர். ஆனால் அவர்களை அலுவலகத்திற்கு விடாமல் ஆதி ராஜாராமின் ஆட்கள் வாசலில் நின்று விரட்டுங்கள் அடித்திருக்கிறார்கள்.

 ஆதி ராஜாராம் ஓபிஎஸ் ஆட்களை அடித்து விரட்ட சொல்லி இருக்கிறார்.   கொஞ்சம் கொஞ்சமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்த்து தாக்கியிருக்கிறார்கள்.  ஓபிஎஸ் அருகே வந்ததும் கெத்து காட்டி முன்னேறிச் சென்று எடப்பாடி ஆதரவாளர்களை அடித்து துவம்சம் செய்திருக்கிறார்கள்.   சூழ்நிலை தங்களுக்கு எதிராக திரும்புவதை அறிந்த ஆதிராஜாராம், தி. நகர் சத்தியா,  விருகை ரவி மூன்று பேரும் காரில் ஏறி பறந்திருக்கிறார்கள்.  ஆனால் வேளச்சேரி அசோக் மட்டும் வாங்கடா வாங்கடா என்று மார்தட்டிக் கொண்டே நின்றிருக்கிறார்.  அவர் மீது இரண்டு கற்கள் வந்து விழுந்ததும் தப்பித்த பிழைத்தோம் என்று அவரும் அங்கிருந்து ஓடி இருக்கிறார் . 

இத்தனை களேபரத்திற்கு பின்னர் ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். 

ஓபிஎஸ் ஆட்கள் இப்படி தயாராக வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.   இல்லை என்றால் நாங்கள் நிறைய பொருட்களைக் கொண்டு வந்திருப்போம் என்று எடப்பாடி தரப்பினர் சொல்ல,  எடப்பாடி ஆட்கள் எல்லாருமே சீன் போட  வந்தவர்கள்.  அவர்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டு கூட வெடிக்க வில்லை.  அவர்கள் வீசும் கல்லு 100 அடி தூரத்துக்கு கூட போகவில்லை.  ஆனால் நாங்கள் வீசும் கல் ஒவ்வொன்றும்  200 அடி தூரத்துக்கு போனது .  தெரிஞ்சிருந்தா இன்னும் பொருட்கள் கொண்டு வந்து இருப்போம் .  நாங்கள் பொருட்கள் அதிகம் கொண்டு வராவிட்டாலும் அவர்கள் பொருட்களை பிடிங்கி அவர்களையே  அடித்து துரத்தி விட்டோம் என்று சொல்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.