ஓபிஎஸ்க்கு மூன்று முறை கொடுத்ததை இபிஎஸ்க்கு ஒருமுறை கொடுத்திருந்தாலே ..ஜெயலலிதாவிடமே வேலையை காட்டியிருப்பார்..

 
je

 எடப்பாடி பழனிச்சாமியை ஓபிஎஸ் ஆதரவாளர்களும்,  பன்னீர் செல்வத்தை எடப்பாடி ஆதரவாளர்கள் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்,  எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.   தேனி மாவட்டத்தில் பன்னீர் செல்வத்தை சந்தித்த கோவை செல்வராஜ் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது எடப்பாடிக்கு பதிலடி கொடுத்தார்.

 அதிமுகவின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பு..ஒருங்கிணைப்பாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்திருக்கும் நிலையிலும் தனது சுயலாப நலத்திற்காக அந்தப் பதவி செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார்.   தனது ஆதரவாளர்களை வைத்து பொதுக்குழு கூட்டுவதாக சொல்லி தன்னைத்தானே இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று  சொல்லுகிறார்.

j

 இதை எதிர்த்து நான் நீதிமன்றம் சென்றேன்.  உயர்நீதிமன்ற தீர்ப்பின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  இதன் பின்னர்தான் திறந்த மனதோடு மீண்டும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார்.  ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி தனது சுய நலத்திற்காக ஏற்க மறுத்துவிட்டார்.  50 ஆண்டுகளாக இயங்கி வரும் அதிமுகவை சுமார் 4 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்து விட்டு கட்சியை கைப்பற்ற திட்டமிடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி .  

ச்

 ஓபிஎஸ் துரோகி என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார்.  ஆனால் சசிகலாவின் காலில் விழுந்து பதவி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி தான் துரோகி.   மூன்று முறை ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா கொடுத்தார்.  மீண்டும் அந்தப் பதவியை திரும்ப ஒப்படைத்தார்.  ஆனால் தற்போது இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெயலலிதா முதலமைச்சர் பதவி கொடுத்திருந்தால் அவருக்கே இபிஎஸ்   துரோகம் செய்திருப்பார்.  ஓபிஎஸ்க்கு மூன்று முறை கொடுத்ததை இபிஸ்க்கு ஒருமுறை கொடுத்திருந்தாலே ஜெயலலிதாவிடமே வேலையை காட்டியிருப்பார் என்றார்.