பாதியில் மேலே சென்றுவிடுவார்.. அண்ணாமலை மீது ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு

 
rs


என் ஜாதகம் மோசமான ஜாதகம்.  நான் புகார் கொடுத்தால் ஒன்று சிறைக்கு சென்று விடுவார், இல்லையேல் அரசியலை விட்டு விலகி விடுவார், இல்லையேல் பாதியில் மேலே சென்று விடுவார்.  அப்படி ஒரு வித்தியாசமான ராசி என்று ராசி.  இதில் அண்ணாமலை தற்போது மாட்டியிருக்கிறார் என்று கடுமையாக தாக்கியிருக்கிறார் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி.

a

 மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கலந்துகொண்டு பேசினார்.   அப்போது,  ஜெயலலிதா முதல்வராக இருந்த போது டான்சி நிலத்தை வாங்கியதில் மாட்டிக் கொண்டு சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது .  அதே மாதிரி தான் இன்றைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கி மாட்டி இருக்கிறார்.  என் ஜாதகம் ரொம்ப மோசமான ஜாதகம்.   நான் புகார் கொடுத்தால் ஒன்று சிறைக்குச் சென்று விடுவார்.  இல்லையேல் அரசியலை விட்டு விலகிவிடுவார் . இல்லை பாதியில் மேலே சென்று விடுவார்.  அப்படி ஒரு வித்தியாசமான ராசி என் ராசி.  இதில் அண்ணாமலை தற்போது மாட்டியிருக்கிறார் என்று கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார்.

அண்ணாமலை கட்டி இருக்கும் ரபேல் வாட்ச் 5 லட்சம் ரூபாய் என்றும், அதை ஏன் இதுவரைக்கும் கணக்கு காட்டவில்லை என்றும்,  அந்த வாட்ச்க்கான பில் எங்கே என்றும் கேட்டு வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி .  இதையே திமுகவினரும் தொடர்ந்து கேட்டு வருகின்றார்கள்.   இதற்கு அண்ணாமலையோ,  ரபேல் வாட்ச் பில் மட்டுமல்லாது எனது சொத்து விவரங்கள் முழுவதையும் காட்டுகிறேன்.  அதே போல் திமுக அமைச்சர்களும் காட்ட தயாரா என்று கேட்டிருக்கிறார்.  ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி , பில் தயாரிக்கும் வேலை நடந்து வருகிறது . அந்த பில் வெளியே வெளியிட்ட பின்னர் வேறு ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பேன் என்றும் எச்சரித்திருக்கிறார் .  இந்த நிலையில் ஆர். எஸ். பாரதி இப்படி மிகவும்  கடுமையாக அண்ணாமலையை தாக்கி பேசியிருக்கிறார்.