அதே மேடையில் மன்னிப்பு கேட்கணும் .. அவன் கோழை.. கொதிக்கும் குஷ்பு

 
k

அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. என்னையும் எனது சகாக்களையும் அவமதித்த மேடையில் அவர் மன்னிப்பு கேட்கட்டும். அவன் கோழை. அவர் அதை ஒருபோதும் செய்ய மாட்டார் என்று ஆத்திரப்பட்டிருக்கிறார் குஷ்பு.

கடந்த மாதம் சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் பேசிய போது,  பாஜக  நிர்வாகிகளும் நடிகைகளும் ஆன குஷ்பூ, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் பற்றி அவதூறான கருத்துக்களை மிகவும் ஆபாசமாக பேசினார் திமுக பேச்சாளர் சைதை சாதிக்  . இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன .

க்க்

பாஜக மகளிர் அணியினர் சைதை சாதிக் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தின.  இதை அடுத்து சைதை சாதிக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டிருந்தார் சைதை சாதிக்.

 இந்த மனு கடந்த 25ம் தேதி விசாரணைக்கு வந்தது.  அப்போது இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி பெண்களைப் பற்றி அவதூறான கருத்துக்களை பேசியிருக்கிறார். அதனால் இனிமேல் இதுபோல் பேச மாட்டேன் என்று அவர் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.  நீதிபதி மேலும் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் சைதை சாதிக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.   விசாரணை 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.  அதுவரைக்கும் சைதை சாதிக்கை போலீசார் கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.

ச்ச்

அதன்படி இன்று மீண்டும் விசாரணை நடந்தது.  மன்னிப்பு கோரிய சைதை சாதிக் நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி மன்னிப்பு கேட்டு, இனிமேல் இப்படி பேசமாட்டேன் என்று  பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தார்.   இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி,  விசாரணை அதிகாரி முன்பு ஒரு வாரத்திற்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கினார்.

kkk

ஆனாலும் இதில் திருப்தி அடையாத குஷ்பு, தங்களிடம் நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும்.  அதுவும் அதே மேடையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.