கருணாநிதியின் மகனா? அதனால்தான் சந்தேகமாக இருக்குது? சீமான் விளாசல்

 
see

ஸ்டாலின் வெறும் காவடி தூக்கல பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடி தூக்குறார். கொடியை எப்புடி பிடிக்கணும் என்று தெரியாதவன் எல்லாம் கொடியைப்பற்றி பேசுறான் என்று திமுகவையும், பாஜகவையும் கடுமையாக சாடினார் சீமான்.

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடுகின்ற மாயோன் திருநாளையொட்டி இன்று
19-8-2022 நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக, கட்சித் தலைமை அலுவலகத்தில் மாயோன் பெருவிழா நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

seeee

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,   ‘’கொடியை எப்புடி பிடிக்கணும் என்று தெரியாதவன் எல்லாம் கொடியைப்பற்றி பேசுறான்.  தேசப்பற்று பற்றி பேசுறான்.   எல்லாத்தையும் அதானிகிட்ட கொடுத்துட்டு  தெருக்கோடியில நின்னு கொடியை புடுச்சு ஆட்டிக்கிட்டு நில்லுங்கன்னு சொல்லுறாங்க.  அம்புட்டு அமைச்சரும் தலைகீழா புடிக்கிறான்.  பி.எஸ்.என்.எல் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு.  உன் கோபுரத்துல தனியாருக்கு ஏன் இடம் கொடுக்குற.  அந்த கொடியும் காசுதான்.  அதுவும் பாலிஸ்டர்தான்’’என்றார் சீமான்.   

அடுத்து அவர் முதல்வர் ஸ்டாலின் குறித்து,  ‘’சீமானுக்கு ஓட்டு போடாத.. சீமானுக்கு ஓட்டு  போடாத..பாஜக தமிழகத்தில் வந்துடும் என்று திமுக பொய்பிரச்சாரம் செய்யுது.  மோடி என் வீட்டுக்கு வர்றாரா? உன் வீட்டுக்கு வர்றாரா? நான் தான் ஓடி ஓடி ஓடி நன்றி!நன்றி! நன்றின்னு போய் சொல்லிக்கிட்டு வர்றேனா?’’ என்று கேட்டவர்,   ‘’நான் கருணாநிதியின் மகன் என்கிறார்...அதனால்தான் சந்தேகமாக இருக்குது?’’ என்று கேட்டுவிட்டு சிரித்தார்.  அவரது கட்சியினர் இதைக்கேட்டு சிரித்தனர்.

பின்னர்,   ’’நான் காவடி தூக்கவா செல்கிறேன் என்கிறார்.  வெறும் காவடி தூக்கல..பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடி தூக்குனவர்தானே.. இனிமேலா புதுசா தூக்கப்போறீங்க?  கருணாநிதி மகன் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிறார்.  கச்சத்தீவு போனபோது என்ன செய்தார்?  கல்வி மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு போன போது என்ன செய்தீர்கள்?’’என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.