அவர் அந்த அர்த்தத்துல சொல்லல; பாரீன்ல படிச்சதால அவர் தமிழை தப்பா புரிஞ்சிக்கிட்டோம்- நள்ளிரவு பரபர

 
p

 இங்கே வருவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இவர்களையெல்லாம் யார் இங்கே உள்ளே விட்டார்கள்? என்று டாக்டர் சரவணன் உட்பட பாஜகவினரை பார்த்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆவேசமாக சொன்னதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அவரது கார் மீது செருப்பு வீசி எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரிதாக வெடித்திருப்பதை அடுத்து அமைச்சர் பிடிஆர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை அவர் வெளிநாட்டில் படித்ததால் அவர் தமிழை தவறாக புரிந்து கொண்டோம்.  அவர் தகுதி என்று சொன்னதை தனிமனித தாக்குதலாக எடுத்துக் கொண்டோம்.  ஆனால் அவர் தகுதி என்று சொன்னது ப்ரோடோகால் (Protocall) என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.  பின்னர் இதைப் புரிந்து கொண்டதும் நேரில் சென்று மன்னிப்பு கேட்டு கேட்டேன் என்கிறார் டாக்டர் சரவணன்.  நேற்று காலையில் நடந்த களேபரத்திற்கு நள்ளிரவில் அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார் சரவணன்.

p

மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர்  டாக்டர் சரவணன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை  நள்ளிரவு சந்தித்து மன்னிப்பு கேட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

 அப்போது,    ’’ராணுவ வீரர் நாட்டுக்காக உயிர் நீத்த தம்பி லட்சுமணன் புதுப்பட்டியைச் சேர்ந்த அவரது பூத உடல் மதுரை விமான நிலையத்திற்கு வந்ததும் அனைவரும் போல பாஜக சார்பாக நானும் பாஜக மாவட்ட தலைவராக இருப்பதால் எங்கள் வீர வணக்கத்தை செலுத்துவதற்காக சென்றோம்.  அப்போது அங்கு என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரியும்.  அமைச்சர் வரும் போது என்ன தகுதி அடிப்படையில் இங்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.  அதை தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொண்டோம். 

pp

 அந்த நிகழ்வுகள் முடிந்து அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கும்போது நானும் எங்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அஞ்சலி செலுத்தி கொண்டு இருந்தபோது வெளியே விரும்பத்தகாத நிகழ்வு ( அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு)நடந்து விட்டது.  வீட்டிற்கு வந்த பிறகு அது மன உறுத்தலாக இருந்தது. அதன் பின்னர் தான் ஒரு தெளிவு கிடைத்தது.

 அமைச்சர் வெளிநாட்டில் படித்தவர் என்பதால் அவரது தமிழை எந்த அளவுக்கு சொல்லுகிறார்,   அந்த எந்த தகுதி என்பது இங்குள்ள நடைமுறையில் ப்ரோடோகால் (Protocall)என்பதை குறிப்பிட்டு இருக்கிறார். ப்ரோடோகால்  படி பூத உடலை அரசு பெற்றுக் கொண்டு வீரரின் உடலை அவரது ஊருக்கு அனுப்புகிறோம்.  நீங்கள் விமான நிலையத்திற்கு வெளியே மரியாதையை செலுத்தலாம்  என்கிற அர்த்தத்தில் தான் அவர் சொல்லி இருக்கிறார்.  ஆனால் அந்த நேரத்தில் நாங்கள் அவர் என்ன தகுதி இருக்கிறது என்று சொன்னதை,  தனி மனித தாக்குதலாக எடுத்துக் கொண்டோம்’’ என்றார்.

sa

அவர் மேலும் அது குறித்து பேசியபோது,   ’’ஆளுங்கட்சி அமைச்சர் மீது தாக்குதல் என்பதால் மன உளைச்சல் தான்.   12 மணி இருக்கும் என்று நினைக்கிறேன்.  அதுவரைக்கும் தூக்கம் வரவில்லை ..யோசித்துப் பார்த்தேன். நான் அடிக்கடி வந்த வீடு எனது தாய் வீடு திமுகவும் பிடிஆர் வீடும்.  அதனால் அமைச்சர் பி டி ஆரிடம் போன் செய்து கேட்டேன்.   அவர் விழித்திருந்தால் நேரில் சென்று பார்க்கலாம் என்று கேட்டேன்.  அவர் விழித்திருந்தார்.  அதனால் நேரில் சென்று எனது வருத்தத்தை சொல்லி மன்னித்து விடுங்கள் அண்ணா. காலையில் இது தெரியாமல் நடந்து விட்டது.   நீங்கள் எந்த தகுதி அடிப்படையில் வந்தீர்கள் என்று கேட்டதும் நாங்கள் தவறாக புரிந்து கொண்டோம்.   நான் இப்போது எம் எல் ஏ இல்லை என்றாலும் லெப்டினன்ட் கர்னல் எனக்கும் அண்ணாமலை சாருக்கும் அஞ்சலி செலுத்த அனுமதி கொடுத்தார். பாஜக தொண்டர்கள் கட்டுப்பாடு இழந்து ஒரு இடத்தில் இப்படி நடந்து கொண்டது பெரிய வேதனையாக இருந்தது.  அது குறித்து அமைச்சரிடம் விளக்கம் கொடுத்துவிட்டேன் .அமைச்சர் இதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டார்’’என்றார்.

d

 பாஜக தொண்டர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்று சொன்ன சரவணன்,   பதவி முக்கியம் இல்லை மன அமைதி முக்கியம் அல்லவா? அதற்காகத்தான் வந்தேன் என்றார் அழுத்தமாக.  பாஜகவில் இனி தொடர போவதில்லை என்றார் உறுதியாக.