முதல்வர் பேசும் போது பேசியது போதும் என்று மைக்கை பிடித்து இழுத்து ரகளை

 
a

முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போது பேசியது போதும் என்று திடீரென்று ஒருவர் மைக்கை பிடித்து இழுக்க , முதல்வர் அவரிடமிருந்து மைக்கை மீட்க இழுக்க ஒரே ரகளையாகி இருக்கிறது மேடையில்.

 தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்காக அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா  வந்துள்ளார்.   அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசிக் கொண்டிருந்துள்ளார்.  

mi

 அப்போது திடீரென்று மேடைக்கு வந்த ஒருவர் முதல்வர் பேசிக் கொண்டிருந்த மைக்கை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.  முதல்வர் அவரிடம் இருந்த் மைக்கை பிடித்து இழுத்ததும்,  பேசியது போதும் என்று சொல்லி அவர் மைக்கை  மடக்கி  எடுத்துக்கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.  முதல்வர் அவரிடமிருந்து மீட்க முயற்சிக்கிறார் .  மேடையில் இருந்தவர்களும் அந்த மைக்கை மீட்க முயற்சிக்கிறார்கள்.

 இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத  தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து நின்று இருக்கிறார்கள் .  பின்னர் சுதாரித்துக் கொண்டு அந்த நபரை பிடித்து இழுத்துச் செல்கிறார்கள்.   இதனால் சற்று நேரம் அங்கு பெரும் பரபரப்பு த ஏற்பட்டிருக்கிறது. 

 மைக்கை பிடித்து இழுத்து நபர் டி. ஆர். எஸ் கட்சியை கொடியை அணிந்து இருந்துள்ளார்.  இதனால் அவர் டி. ஆர். எஸ்  கட்சிக்காரர் என்றும்,  இது டி.ஆர்.எஸ் கட்சியின் சதித்திட்டம் என்றும் பாஜகவினர் குற்றம் சாட்சி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தில் டி. ஆர். எஸ் . கட்சி குடும்ப  அரசியல் நடத்தி வருகிறது என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டி பேசி இருந்திருக்கிறார்.  அதனால் டி. ஆர். எஸ் கட்சியை சேர்ந்த தொண்டர் மைக்கை பிடுங்கி இருக்கிறாரோ என்று சந்தேகிக்கப்படுகிறது.

 இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.