‘’அங்கு ஒரு தகவலை சொல்லிவிட்டு இங்கு வந்து ஒரு தகவலை சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்..’’

 
ப்ப்

 தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில்,  அது குறித்த கேள்விக்கு,  ரஜினி- ஆளுநர் தொடர்பாக அதிக கிசுகிசுப்புகள்  வரும் என்கிறார் நயினார் நாகேந்திரன்.   வரும் என்று அவர் சொல்வதைப் பார்த்தால் இப்படி கிசுகிசுப்புகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் தமிழக அரசியலில் ஒரு சலசலப்பை ஏற்படுத்துவதற்காக தான் அந்த சந்திப்பு நிகழ்ந்ததா என்று கேள்வி எழுந்திருக்கிறது.

 முதல் நாள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த ரஜினி மறுநாள் சென்னையில் ஆளுநரை சந்திக்கிறார் என்றதுமே இது அரசியல் காரணம்தான் என்ற பேச்சு எழுந்தது.  அதை உறுதிப்படுத்தும் விதமாக ரஜினியே,  ஆளுநருடன் அரசியல் குறித்து பேசினேன் என்று போட்டு உடைத்து விட்டார்.  இதனால் காங்கிரஸ்,  கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அரசியல் பேசுவதற்கு ஆளுநர் மாளிகை என்ன கட்சி அலுவலகமா ? என்று கேட்டு வருகின்றனர்.

ன

 அதிமுகவுக்கு ரஜினியை தலைமை தாங்க பாஜக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்க ,  கட்சி தொடங்க முடியாது,  அரசியலுக்கு வர முடியாது என்று உறுதியாக சொல்லி விட்டதால் ரஜினி வாய்ஸ் ஆவது கொடுக்கட்டும்.  அதுவும் கூட கட்சி சார்பாக கொடுக்க வேண்டாம் . பிரதமரின் ஆட்சி தொடரட்டும் இந்த பிரதமர் மீண்டும் நமக்கு தேவை என்கிற ரீதியில் அவர் வாய்ஸ் கொடுக்கட்டும் என்று பாஜக மேலிடம் நினைப்பதாகவும்,  அதைத்தான் மரியாதையின் காரணமாக ஆளுநர் மூலமாக ரஜினிக்கு சொல்லி இருப்பதாகவும் தகவல் பரவுகிறது.  ஆனால் ரஜினியின் அடுத்தடுத்த முடிவுகள் என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 இந்த நிலையில் ஆளுநர் ரஜினி சந்திப்பு குறித்து வரும் பல்வேறு தகவல் குறித்து தமிழக பாஜக துணைத் தலைவரும், பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரனிடம் ராமநாதபுரத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ,   ஆளுநர் -நடிகர் ரஜினிகாந்த் இடையிலான சந்திப்பு தொடர்பாக அதிக கிசுகிசுப்புகள் வரும்.. என்றார்.

 அதிமுக கூட்டணி விவகாரம் குறித்த கேள்விக்கு,   வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்றார்.

 ஜிஎஸ்டி விவகாரத்தில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவராஜன் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு,  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்.  ஜி எஸ் டி கவுன்சிலில் கலந்து கொண்டு அங்கு ஒரு தகவலை சொல்லிவிட்டு இங்கு வந்து ஒரு தகவல்களை சொல்லி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்றார்.