முஸ்லிம்களின் மக்கள் தொகை குறைந்து வருவது நல்லது... ஓவைசிக்கு ஹரியானா அமைச்சர் பதில்

 
அனில் விஜ்

முஸ்லிம்களின் மக்கள் தொகை குறைந்து வருவது நல்லது, ஆனால் அதை மேலும் கைவிட வேண்டும் என்று ஹரியானா அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் மக்கள் தொகை கட்டுப்பாடு பேச்சு குறித்து கருத்து ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி  கூறுகையில்,  கவலைப்படாதீர்கள். முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரிக்கவில்லை. மாறாக குறைகிறது. ஆணுறைகள் அதிகம் பயன்படுத்துபவர் யார்? நாங்கள் தான். மோகன் பகவத் இதைப் பற்றி பேசமாட்டார் என தெரிவித்தார்.

தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

அசாதுதீன் ஓசைசி கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி கருத்து தெரிவித்துள்ளது. ஹரியானா மாநில அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனில் விஜ் கூறுகையில், முஸ்லிம்களின் மக்கள் தொகை குறைந்து வருவது நல்லது, ஆனால் அதை மேலும் கைவிட வேண்டும் என தெரிவித்தார்.

மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மக்கள் தொகைக்கு வளங்கள் தேவை. வளங்களை உருவாக்காமல் வளர்ந்தால் அது சுமையாகி விடும். மக்கள் தொகை ஒரு சொத்தாக கருதப்படும் மற்றொரு பார்வை உள்ளது. இரு அம்சங்களையும் மனதில் வைத்து, விரிவான சிந்தனைக்கு பிறகு தயாரிக்கப்பட்ட மக்கள்தொகை கொள்கையை இந்தியா கொண்டிருக்க வேண்டும். மேலும் அது அனைத்து சமூகங்களுக்கும் சமமாக பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.