பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை புகழ்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ...

 
பா.ஜ. உறுப்பினர்கள் எண்ணிக்கையை விட 8 நாடுகளில் மட்டுமே மக்களின் தொகை அதிகம் – பா.ஜ. செயல் தலைவர் நட்டா பெருமிதம்

நட்டா ஜியின் எளிமையும், எளிமையாக நடந்து கொள்ளும் ஆளுமையும் உண்மையான மக்கள் சேவகன் என்ற அடையாளத்தை அளிக்கிறது என்று காங்கிரஸிருந்து வெளியேற்றப்பட்ட அந்த கட்சியின் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய் புகழ்ந்து பேசினார்

ஹரியானா மாநிலம் அடம்பூர் சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய். இவர் அண்மையில் நடைபெற்ற ஹரியானா மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கனுக்கு வாக்களிக்காமல், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிகளின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் மீடியா தொழிலதிபர் கார்த்திகேய சர்மாவுக்கு வாக்களித்தார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கன் தோல்வி அடைந்தார். இதனால் காங்கிரஸ் தலைமை குல்தீப் பிஷ்னோய் மீது கோபம் அடைந்தது. 

காங்கிரஸ்

இதனையடுத்து குல்தீப் பிஷ்னோயை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்தது. இதனால் குல்தீப் பிஷ்னோய் பா.ஜ.க.வில் இணையக் கூடும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று குல்தீப் பிஷ்னோய் டெல்லி சென்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார். இதனால் அவர் பா.ஜ.க.வில் விரைவில் இணைவார் என கூறப்படுகிறது.

ஜே.பி.நட்டா, குல்தீப் பிஷ்னோய்

ஜே.பி. நட்டாவை சந்தித்தது தொடர்பாக குல்தீப் பிஷ்னோய் டிவிட்டரில், ஜே.பி. நட்டா ஜியுடன் ஒரு நெருக்கமான சந்திப்பு நடத்தி தற்போதைய அரசியல் செய்திகளை பற்றி விவாதித்தேன். நட்டா ஜியின் எளிமையும், எளிமையாக நடந்து கொள்ளும் ஆளுமையும் உண்மையான மக்கள் சேவகன் என்ற அடையாளத்தை அளிக்கிறது என பதிவு செய்து இருந்தார்.