உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்... ஹரிஷ் ராவத்

 
ஹரிஷ் ராவத்

உத்தரகாண்டில் காங்கிரஸ் தோல்விக்கு அந்த கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் பொறுப்பேற்றுள்ளார். 

உத்தரகாண்டில் 70 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. கடந்த 10ம் தேதியன்று இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 47 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. எப்படியும் ஆட்சியை பிடித்து விடுவோம் என்று நினைத்த காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

காங்கிரஸ்

உத்தரகாண்டில் காங்கிரஸ் தோல்விக்கு அந்த கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் பொறுப்பேற்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஹரிஷ் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உத்தரகாண்டில் நாங்கள் வெற்றி பெறுகிறோம் என்று எல்லோரும் நினைத்தோம். பிரச்சாரக் குழுத் தலைவர் என்ற முறையில் தோல்விக்குப் (உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி) பொறுப்பேற்கிறேன்.

தேர்தல் முடிவுகள் - Election Results

செயற்குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர் மற்றும் தலைமையிடம் மன்னிப்புக் கேட்டேன். இதற்கு முன்பும் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளேன். முந்தைய சந்தர்ப்பங்களில் கட்சி உறுப்பினர்கள் வழங்கிய ஆலோசனைகளின்படி கட்சி செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.