காங்கிரஸ் என்னை வெளியேற்ற வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்... ஹரிஷ் ராவத்

 
ஹரிஷ் ராவத்

என் மீதான இந்த (கட்சி டிக்கெட் விற்பனை) குற்றச்சாட்டுகளின் வெளிச்சத்தில் காங்கிரஸ் என்னை வெளியேற்ற வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் என ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் அந்த தேர்தலை சந்தித்தது. காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று ஹரிஷ் ராவத் மன்னிப்பு கேட்டார். இந்த சூழ்நிலையில், தேர்தலின்போது, கட்சி டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாகவும், பணத்துக்காக அரசு நியமனங்களை வழங்கியதாகவும் ஹரிஷ் ராவத் மீது புதிய புகார் வந்துள்ளது.

காங்கிரஸ்

இது காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக ஹரிஷ் ராவத் டிவிட்டரில், கட்சி சீட்டு விற்ற குற்றச்சாடடு மிகவும் தீவிரமானது. முதல்வராகவும், கட்சியின் மாநில தலைவராகவும், கட்சியின் பொது செயலாளராகவும், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும் இருந்த ஒருவர் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்தால் விஷயம் இன்னும் தீவிரமாகிறது. என் மீதான இந்த குற்றச்சாட்டுகளின் வெளிச்சத்தில் காங்கிரஸ் என்னை வெளியேற்ற வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். 

பிரியங்கா, ராகுல்,சோனியா

தீமைகளிலிருந்து விடுபட ஹோலி ஒரு பொருத்தமான சந்தர்ப்பம். ஹரிஷ் ராவத் போன்ற தீமைகளை இந்த ஹோலிகாவில் காங்கிரஸால் எரிக்க வேண்டும். கட்சியில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவரால் இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. மிக முக்கியமான பதவியில் உள்ள ஒருவரின் ஆதரவாளர்களால் இது பரப்படுகிறது என்று பதிவு செய்துள்ளார். சோனியா காந்தி குடும்பத்துக்கு ஹரிஷ் ராவத் மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.