கைகோர்க்கும் ஓபிஎஸ் -சசிகலா! தயக்கம் காட்டும் தினகரன்

 
so

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சசிகலாவும் ஓ. பன்னீர்செல்வம் கைகோர்க்கும் முடிவில் உள்ளனர் என்றும்,  இதன் முதற்கட்டமாக  எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்த தென் மாவட்ட எம்எல்ஏக்கள்  சிலரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.  தனி கட்சி நடத்தி வருவதால்  சசிகலா, ஓபிஎஸ்சுடன் இணைய டிடிவி தினகரன் தயக்கம் காட்டி வருவதாக தகவல் பரவுகிறது.   ஓபிஎஸ் தரப்பிலும்  சிலர் சசிகலாவுடன் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்.

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.   ஆனால் இன்றளவும் நான் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று சொல்லி வருகிறார் சசிகலா.   அதேபோல் ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.   ஆனால்  ஓபிஎஸ்,  நான் தான் அதிமுகவின்  ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லி வருகிறார்.

os

 அதிமுகவின் பொதுக்குழுவுக்கு எதிராகவும்,  எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் புகார் கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ்.   இந்த நிலையில் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது எடப்பாடி- ஓபிஎஸ் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற நீதிபதியின் கேள்விக்கு,  இணைய வாய்ப்பில்லை என்று உறுதியாக சொல்லி விட்டதால்  ஓகே எடப்பாடி எதிர்ப்பதற்காக சசிகலாவும் ஓபிஎஸ் முடிவெடுத்து விட்டார்கள்.  

 ஆனால் தன் கட்சி தொடங்கி நடத்தி வருவதால் இவர்களுடன் இணைவதில் தினகரன்  தயக்கம் காட்டி வருகிறார் என்கிறார்கள் .  ஆனால் தேனிக்கு சென்ற போது அங்கே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தினகரனுக்கு வரவேற்பு அளித்தனர்.   மாவட்ட செயலாளர் சையத் கான் தினகரனுடன் சில நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தியதும் ஓபிஎஸ்சுடன்  தினகரன் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது .

tt

தேவர் சமுதாய மக்களும் ஓபிஎஸ் -சசிகலா -தினகரன் மூன்று பேரும் இணைந்து எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன் வைத்து வருகிறார்கள்.  சசிகலா - ஓபிஎஸ் இணைய  இருக்கும் நிலையில் அதற்கு முதற்கட்டமாக எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்த தென் மாவட்ட எம்எல்ஏக்கள் சிலரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் என்று தகவல்.

 சசிகலா-ஓபிஎஸ் இணைப்பிற்கான வேலைகள் ஒரு பக்கம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்ற நிலையில்,   இன்னொரு பக்கம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் சசிகலாவுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம்.