சிவ சேனாவை உடைக்க பா.ஜ.க. மேற்கொண்ட புதிய விதம் அந்த கட்சியின் ஆபரேஷன் லோட்டஸூக்கு ஒரு எடுத்துக்காட்டு.. காங்கிரஸ்

 
எச்.கே. பாட்டீல்

மகாராஷ்டிராவில் கட்சியை (சிவ சேனா) உடைக்க பா.ஜ.க. ஒரு புதிய பரிசோதனையை மேற்கொண்டுள்ள விதம் பா.ஜ.க.வின் ஆபரேஷன் லோட்டஸூக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றார். இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் எச். கே.பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு நீண்ட காலம் நீடிக்காது என்று எனக்கு தோன்றுகிறது. 

ஏக்நாத் ஷிண்டே

இந்த அரசு (ஷிண்டே தலைமையிலான அரசு) செயல்பட முடியாது. பல குழப்பங்களும் முரண்பாடுகளும் உள்ளன. சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள் அமைதியின்றி உள்ளனர். அவர்கள் இவ்வளவு பயணம் செய்த விதம் அவர்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை காட்டுகிறது. மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வாய்ப்புள்ளதாக சில செய்திகளை நான் பார்த்தேன். அது பொய். காங்கிரஸ் இதை பற்றி விவாதிக்கவோ அல்லது எதையும் முடிவு செய்யவோ இல்லை. வதந்திகள் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளன. 

பா.ஜ.க.

மகா விகாஸ் அகாடி கூட்டணி நிலையானது. மகாராஷ்டிராவில் கட்சியை (சிவ சேனா) உடைக்க பா.ஜ.க. ஒரு புதிய பரிசோதனையை மேற்கொண்டுள்ள விதம் பா.ஜ.க.வின் ஆபரேஷன் லோட்டஸூக்கு ஒரு எடுத்துக்காட்டு. காங்கிரஸ் மகா விகாஸ் அகாடி  கூட்டணியுடன் உள்ளது. இன்று (நேற்று) நாங்கள் அனைவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு வாக்களித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.