கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் ஒரு முஸ்லிம் அல்லது தலித்தை முதல்வராக்க கட்சி தயார்.. எச்.டி. குமாரசாமி வாக்குறுதி

 
க்ளார்க் போல் என்னை நடத்தியது காங்கிரஸ் – குமாரசாமி

2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஒரு முஸ்லிம் அல்லது தலித்தை  முதல்வராக்க கட்சி தயாராக இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.


கர்நாடகாவில் தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 2023ம் ஆண்டில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடப்பதற்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், 2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஒரு முஸ்லிம் அல்லது தலித்தை  முதல்வராக்க கட்சி தயாராக இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மதசார்ப்பற்ற ஜனதா தளம்

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பஞ்சரத்ன ரத யாத்திரையில் பங்கேற்ற அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி பேசுகையில் கூறியதாவது:  2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஒரு முஸ்லிம் அல்லது தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்க கட்சி தயார். எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 123 தொகுதிகளில் வெற்றி பெறுவதான் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் இலக்கு.

ஹிஜாப் அணிந்த பெண்கள்

எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 100 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வெளியிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கர்நாடகாவில் ஹிஜாப் தடை, ஹலால் இறைச்சி, பஜ்ரங்தள செயற்பாட்டாளர் ஹர்ஷா கொலை மற்றும் திப்பு சுல்தான்  தொடர்பான சர்ச்சை போன்ற பிரச்சினைகள் உலுக்கி வருகின்றன. இந்நிலையில், ஒரு முஸ்லிம் அல்லது தலித்தை  முதல்வராக்க தயாராக இருப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.