இனிமே தாண்டா இருக்குது... பயந்தாங்கோளிகளா...

 
h

விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து சொல்லாததற்கு மத்திய இணை அமைச்சர் முருகன்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  பாஜக தேசிய செயற்குழு தலைவர் எச். ராஜா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

 இந்த நிலையில் கோவை பூ மார்க்கெட் பகுதியில் இருக்கும் தெப்பக்குளம் மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய உறுப்பினர் எச்.  ராஜா பங்கேற்றார்.   இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை ஏற்ற இந்த ஊர்வலத்தில் எச். ராஜாவும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

r

அப்போது,  விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கூடினோம் கலைந்தோம் என்று இல்லாமல் வீடு வீடாக சென்று விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர் இன்னொரு முறை வந்து விடக்கூடாது என்று பிரச்சாரம் செய்ய வேண்டும் .  பெரிய இயக்கமாக உருவாக வேண்டும் என்றார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக இவ்வாறு பேசிய ராஜா,   கடந்த இரண்டு ஆண்டுகளாக சீன வைரசால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடியாமல் போய்விட்டது.  சீன வைரஸ் மட்டுமல்லாது சீன பொம்மைகள்,  சீனப்பட்டாசுகள் எல்லாமே ஆபத்தானது.   சீனா உற்பத்தி செய்து அனுப்பிய கம்யூனிஸ்ட் கட்சி வரை அனைத்துமே தரமற்றவை தான்.   கம்யூனிசம் என்று சொன்னாலே மக்களை கஷ்டத்தில் தள்ளுவது என்று கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக சாடினார்.

 இனிமேல் தான்டா உள்ளது என்று கடல் கண்ணன் கூறி இருக்கிறார்.   கனல் கண்ணனை வெட்கம் கெட்டவர் தான் கைது செய்வார்கள். என்ற ராஜா,  திராவிடர்கள் கருத்து திருடர்கள்.   நாத்திகம் ஒன்றும்  ஈவேரா கண்டுபிடித்தது இல்லை. திராவிடியன் ஸ்டாக் என்பதே மானங்கெட்டவர்கள் தான் என்று கடுமையாக சாடினார்.

s

 தமிழ்நாடு அரசாங்கம் மூளை கெட்டு திரியக்கூடாது.  தென்னாடுடைய சிவனே போற்றி என்று சொன்னால் பாரத நாடு முழுமைக்கும் தலைவர் சிவன் என்று அர்த்தம். இறை தூதர்கள் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள்.  பாரத மாதாவிற்கு நாம் என்ன குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டோமா என்ன?  இறைத்தூதர்கள் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள் என்றார்.

 தொடர்ந்து பேசிய எச். ராஜா ஊடகங்கள் அனைத்தும் பயந்தாங்கோளியாக  இருக்கின்றன.   இந்த அரசாங்கம் கிருத்துவ பாதிரியார் ஜெகத்கஸ்பரை கைது செய்ய வேண்டும்.   ngo எல்லாம் கலெக்ஷனுக்காக தான் செயல்படுகின்றனர்.  வெடி மருந்தின் மீது தமிழக மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.  ஏனென்றால் இங்கு திராவிடம் ஆடல் உள்ளது.  அரசியல்வாதிகள் மதத்திற்குள் வராமல் இருந்தால் ஆதீனங்கள் அரசியல் பேச மாட்டார்கள் என்றார்.