விபச்சாரத்திற்கு புது வார்த்தை கண்டறிந்தவர்... திமுகவினரை விளாசும் எச்.ராசா

 
h

 தமிழ்நாட்டில் அமலில் இருப்பது ஸ்டாலின் ஆட்சியா? மாலிக்கபூர் ஆட்சியா? என்கிற சந்தேகம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது என்கிறார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா. அவர் இது குறித்து மேலும் செய்தியாளர்களிடம் பேசிய போது,    இந்துக்களின் சொத்துக்களை பறித்து அவர்களை வீதியில் நிறுத்தும் வகையில் வக்பு வாரியத்தின் நடவடிக்கைகள் இருக்கின்றன.  திருச்சியில் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்கள் இடம் பெற்று இருக்கும் பல ஊர்களை வக்பு வாரிய சொத்து என்றார்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு.

a

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் வகாப்பு என்பவர் வசம் இருந்த சொத்துக்களை வக்பு வாரிய சொத்துக்கள் என்று மாவட்ட நிர்வாகம் மூலமாக கூறுகிறார்கள்.  தமிழ்நாடு முழுவதும் வக்பு சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் வலைதளம் மூலமாக எங்களிடம்  புகார் பதிவு செய்யலாம். 

 இந்து விரோதமாக திமுகவில் ஆபாச ஆ.ராசாவும் விபச்சாரத்திற்கு புது வார்த்தை கண்டறிந்த ஒருவரும் நாங்கள் இந்து எதிரி அல்ல; நாங்கள் பார்ப்பனர்களுக்குத் தான் எதிரி என்கிறார்கள்.  ஆனால் வக்பு வாரியத்தால் திருச்சியில் முத்தரையர் , பட்டியலின மக்களும்,  ராணிப்பேட்டையில் வன்னியர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிராமணர்கள் அல்ல என்ற எச். ராஜா ,  எந்த கட்சியாலும் எங்களை தொட முடியாது என்கிறார் ஆவேசத்துடன்.

se

 திமுகவின் மூன்று அமைச்சர்கள் சிறைக்கு செல்ல இருக்கிறார்கள் என்கிறார் எச். ராஜா.   சிறைக்கு செல்ல இருக்கும் மூன்று பேரில் செந்தில் பாலாஜிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன்.   என் பெயரிலும் என் மனைவி பெயரிலும் இருக்கும் மின் இணைப்புகளுக்கு கூடுதலாக கட்டணம் வந்திருக்கிறது. மின்சார துறை அமைச்சர் எந்த பணியும் செய்வதில்லை.   யாரோ செய்த தவறுக்கு நான் எப்படி கூடுதலாக பணம் கட்ட முடியும்?  என்ற கேள்வி எழுப்பினார். மேலும்,   ஆவடி நாசர் ஆறு மாதம் மாடு மேய்த்து பால் கலந்து ஒரு லிட்டர் பால் 36 ரூபாய்க்கு லாபம் கிடைக்குமா என்று சொல்ல வேண்டும் என்கிறார்.

யூடியூப் சேனல் செய்தியாளர்கள்  தொடர்ந்து கேள்வி கேட்க,   250 சப்ஸ்கிரைபர் உள்ள யூடியூப் காரர்கள் கேள்வி கேட்கின்றீர்கள் என்றார் எரிச்சலுடன்.