தப்பா போகும்.. புதுசா வந்தவன்... சீறிப்பாய்ந்த எச்.ராஜா

 
ஹ்

ஆடியோ விவகாரத்தில் டிவி ரிருபரிடம் சீறிப்பாய்ந்தார் எச்.ராஜா.

 மதுரையில் மறைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த வந்த போது பாஜகவினருக்கும் நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாஜகவினர் அமைச்சர் கார் மீது செருப்பை வீசி எதிர்ப்பை காட்டினர்.    இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.   இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று பாஜக மதுரை மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அமைச்சர் பிடிஆர்-ஐ நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார்.

அ

 இந்த செருப்பு வீச்சு சம்பவம் திடீரென்று நடந்தது அல்ல.   முன்கூட்டியே திட்டமிட்டு நடந்த ஒன்று .  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் இடையே முன்கூட்டியே இது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் என்று சொல்லி அது குறித்து அண்ணாமலை பேசியதாக ஆடியோ வெளியானது.  ஆனால் அண்ணாமலையுடன் பேசியதாக ஆடியோவில் இருக்கும் மதுரை பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன்.  அவர் இதை மறுத்துள்ளார்.

அந்த ஆடியோ போலியானது என்று மறுத்திருக்கிறார்.   ஆடியோவில் இருப்பது என் குரல் அல்ல.  அப்படி நாங்கள் பேசிக் கொள்ளவும் இல்லை.  அது யார் குரல் என்பதே இனிமேல் தான் ஐடி வீங்கில் கொடுத்து செக் பண்ண வேண்டும்.  இந்த ஆடியோ போலியானது என்பது மட்டும் உண்மை.  மிமிக்ரி  செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். அண்ணாமலைக்கு பாஜகவில் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று இப்படி செய்திருக்கிறார்கள் என்று சீந்திரன் செய்தியாளர்களிடம் புகார் தெரிவித்து இருந்தார்.

ப்

 மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கும் சைபர் கிரைம் அலுவலகத்திலும் இது தொடர்பாக சுசீந்திரன் புகார் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில்,  விருதுநகரில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவிடம், அண்ணாமலை ஆடியோ என்று சன் டிவி நிருபர் கேள்வி கேட்க,  கடுப்பான ராஜா,  ‘’ மதுரை மாவட்ட தலைவர் அந்த ஆடியோ போலியானது.  அதில் உள்ளது எனது குரல் அல்ல  என்று சொல்லி இருக்கிறார்.  காவல்துறையிலும் புகார் கொடுத்திருக்கிறார்.  அத்தோடு முடிந்து போச்சுல்ல.  அப்புறமும் எதுக்கு அண்ணாமலை ஆடியோன்னு நோண்டுறீங்க?    அப்புறம் மீறியும் அதேயே கேட்டா தப்பா போகும்..நான் உங்க வீட்டுல யாரையாவது பேசினா எப்படி இருக்கும்?  என்  கட்சி என் வீடு.  பேசக்கூடாது.  மிமிக்ரி பண்ணி வெளியிட்டிருக்கான்.  இதை போய் ஸ்டாலின்கிட்ட  கேட்கணும்? உங்க கட்சியில புதுசா வந்தவன்  இப்படி மிமிக்ரி ஆடியோ வெளியிட்டிருக்கானே என்று கேட்க துப்பிருக்கா? திராணி இருக்கா?  முதுகெலும்பு இருக்கா?’’என்று சீறிப்பாய்ந்தார்.