பாரத் மாதா கீ ஜே என்று சொல்லாதவர்களை கம்பால் அடியுங்க... பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

 
கியான் தேவ் அஹுஜா

பாரத் மாதா கீ ஜே என்று சொல்லாதவர்களை கம்பால் அடியுங்க என பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் கரௌலி மற்றும் ஜோத்பூர் வன்முறை மற்றும் ஆல்வாரின் ராஜ்கரில் கோயில் இடிப்பு சம்பவம் ஆகியவற்றுக்கு எதிராக ஆல்வாரில் இருந்து ஜான் ஹங்கர் பேரணியை பா.ஜ.க. தொடங்கியது. இதில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் சதீஷ் பூனியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், அருண் சதுர்வேதி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டர். இந்த பேரணியில் சர்ச்சைக்குரிய அறிக்கைகளுக்கு பெயர் பெற்ற பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கியான் தேவ் அஹுஜாவும் கலந்து கொண்டார்.

முஸ்லிம்கள்

அந்த பேரணியில் கியான் தேவ் அஹுஜா பேசுகையில் கூறியதாவது: முஸ்லிம்கள் இந்தியாவை ஆண்டதில்லை. மொகலாயர்களும், ஆப்கானியர்களும் ஆண்டார்கள். பாரத் மாதா கீ ஜே என்று சொல்லாதவர்களை கம்பால் அடியுங்க. உன் அப்பாவும், தாத்தாவும் அடித்து கட்டாயப்படுத்தி முஸ்லிம் ஆக்கப்பட்டார்கள். முகலாயர்கள் இன்றைய முஸ்லிம்களை துன்புறுத்தினார்கள். சகோதரிகள் மற்றும் மகள்களை பலாத்காரம் செய்தார்கள், பிறகு முஸ்லிம்களாக மாறினர், இல்லையென்றால் அவர்கள் இந்துக்கள். 

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை காப்பாற்ற முயற்சிக்கும் வசுந்தரா ராஜே… பா.ஜ.க. கூட்டணி கட்சி குற்றச்சாட்டு

இன்றைய முஸ்லிம்கள் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்கள். எனவே ஒரு நாள் முஸ்லிம்கள் இந்துக்களாக மாறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு முன் கடந்த மார்ச் மாதத்தில் கியான் தேவ் அஹுஜா, வசுந்தரா ராஜே மீண்டும் ராஜஸ்தான் முதல்வராக எண்ணத்தை நிறுத்த வேண்டும். ராஜஸ்தான் முதல்வராக புதிய முகத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.