குஜராத் விரைந்தார் ஓபிஎஸ்! திடீர் பயணம் ஏன்?

 
o

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.  இதை அடுத்து நடந்த பதவி ஏற்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றார்.   இந்த விழாவில் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா,  பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரிடம் பேசினார். 

o

 இந்த நிலையில் அவர் மீண்டும்  குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.   ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடுவதாக சொல்லி இருக்கும் நிலையில்,  எடப்பாடி பழனிச்சாமி அணியினர் போட்டியிடுவதாக சொல்லி இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர்  தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டனர்.

 ஓபிஎஸ் அணியினரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுத்துள்ளனர்.  இதற்காக அவர் ஓபிஎஸ்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார்.   இந்த சந்திப்பின்போது ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்திலிங்கம், வெல்ல மண்டி நடராஜன் , மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.  பாஜக சார்பில் சிபி ராதாகிருஷ்ணன்,  எச். ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

p

 இந்த பரபரப்பான சூழலில் ஓபிஎஸ் திடீரென்று குஜராத் மாநிலத்திற்கு காலையில் புறப்பட்டு சென்றிருக்கிறார்.   குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திற்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.  அவருடன் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூன்று பேரும் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

 அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெறுவதாகவும்,  அதில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது .  இதை அடுத்து அவர் பயணம் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.  ஆனால் குஜராத்தில் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து அரசியல் தொடர்பான ஆலோசனையை ஓபிஎஸ் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவுகிறது.