குஜராத்தின் மகத்தான வெற்றி 2024 வெற்றிக்கு நேராக பாதை அமைக்கிறது - குஷ்பு

 
கு

குஜராத் மாநிலத்திற்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது.   கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி நடத்தி வரும் பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்திருக்கிறது.  

 குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது.  காங்கிரஸ் கட்சி பதினாறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.  குஜராத்தில் ஆட்சியைப் பிடித்தே தீருவோம் என்று தீவிரத்துடன் களம் இறங்கிய ஆம் ஆத்மி கட்சிக்கு ஐந்து இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.   காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. 

ம

 இதுகுறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ,   தேர்தல் அறிவிக்கப்பட்ட போது குஜராத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்காது என்று பலர் சொல்லி வந்தார்கள். ஆனால் குஜராத்தில் இது போன்ற மிகப்பெரிய வெற்றியை யாரும் பார்த்தது இல்லை.   27 ஆண்டுகளாக தொடர்ந்து குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில் தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது பாஜக.   இது பாஜகவின் முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்திருக்கிறது.  பிரதமர் மோடியின் அலை இன்னும் இருப்பது குஜராத் தேர்தல் மூலம் இன்னும் தெளிவாக இருக்கிறது என்கிறார்.  

 அவர் மேலும், குஜராத்தின் மகத்தான வெற்றி 2024 வெற்றிக்கு நேராக பாதை அமைக்கிறது  என்கிறார்.