குஜராத்தில் பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ... மோடி ஒரு வளர்ச்சி மனிதர்.. அஷ்வின் கோட்வால் புகழாரம்

 
அஷ்வின் கோட்வால் (தலையில் வெள்ளைதுண்டு)

குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஷ்வின் கோட்வால் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.க.வில் இணைந்தார்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் கேத்ப்ரஹ்மா சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காங்கிரஸின் அஷ்வின் கோட்வால். இவர் நேற்று யாரும் எதிர்பாராத வண்ணம் அஸ்வின் கோட்வால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ்

இதனையடுத்து அஷ்வின் கோட்வால் ஆளும் கட்சியான பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வில் இணைந்த பிறகு அஷ்வின் கோட்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: நான் பணியாற்றிய கட்சியால் (காங்கிரஸ்) நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் வந்த சமுதாயம், பழங்குடி சமூகத்திற்குள் இருப்பதாக காங்கிரஸ் பாசாங்கு செய்கிறது. மோடி ஒரு வளர்ச்சி மனிதர். அத்தகைய வளர்ச்சி சார்ந்த மனிதரை நாடு ஒரு போதும் பெற முடியாது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்து, குஜராத்தின் உமர்கம் கிராமம் முதல் அம்பாஜி வரை வளர்ச்சி அடைய செய்துள்ளார். 2007ல் மோடி சாகேப் என்னிடம் பேசியபோது, பழங்குடியின சகோதரர்கள் அனைவரும்கும் பழங்குடியினர் பகுதியில் வீடு இருக்க வேண்டும் என தெரிவித்தார். பா.ஜ.க.வுக்கு அரசியலில் நல்ல மனிதர்கள் மற்றும் சமூகத்திற்காக நல்ல செயல்களை செய்வோர் தேவை. காங்கிரஸை ஏமாற்றி காங்கிரஸ் செயல்படுகிறது. குஜராத்தில் கல்வி முறை தோல்வி அடையவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.