ஏய்! என்னா?பூச்சி காட்றியா? நல்லாருக்காது! தரை லோக்கலாக இறங்கிய அதிகாரி

 
p

தரை லோக்கலாக திண்டுக்கல் மாவட்ட உயர் காவல்துறை அதிகாரி ஒருவர், பாஜகவினரை மிரட்டியதாக அக்கட்சியின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் நாளை 36 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது .  இதில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை வருகிறார். இதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காந்திகிராமம் செல்கிறார்.  

h

 மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பிற்பகல் 2 மணிக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி.   காந்திகிராமத்தில் விழா முடிந்த பின்னர் 4:00 மணி அளவில் மீண்டும் புறப்பட்டு மதுரை விமான நிலையம் செல்கிறார்.   இதற்காக காந்தி கிராமம் சுகாதார அறக்கட்டளையின் வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் 3 ஹெலிகாப்டர்கள் நிற்கின்ற வகையில் ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளன. 

பிரதமர் வருகையை முன்னிட்டு காந்திகிராமத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தேசிய பாதுகாப்பு படை,  கமாண்டோ உள்பட 4500 க்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளார்கள். மதுரை விமான நிலையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரதமரை வரவேற்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் உள்ளன. பிரதமரின் வருகையினால் திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜகவினர் குவிந்துள்ளனர். இந்த நிலையில்,  அங்கு பாஜகவினருக்கும் காவல்துறை உயரதிகாரிக்கும் இடையே நடந்த விவகாரம் குறித்து, தமிழக பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,

na

’’என்னா! பூச்சி காட்றியா? நல்லாருக்காது!
ஏய்! என்னா?
இதெல்லாம் ஒரு ரவுடியின் வார்த்தைகள் அல்ல. இன்று திண்டுக்கல் மாவட்ட உயர் காவல்துறை அதிகாரி பாஜகவினரை மிரட்டிய போது உதிர்த்த முத்துக்கள்.
இதுவே திராவிட மாடல்!!!’’ என்று பதிவிட்டிருக்கிறார்.