என்ன கழற்றி இருப்பே நீ.. வீட்டுக்கு போய் இருக்க முடியுமா? எச்சில் இலை எடுப்பதை போன்றது கவர்னர் வேலை - ஆர்.எஸ்.பாரதி பேச்சு

 
ர்ச்

 திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் ஆர்.எஸ். பாரதி.   கட்சியின் அமைப்பு செயலாளராக உள்ளார்.  அவர் எது பேசினாலும் அது சர்ச்சையாகி விடுகிறது. அப்படித்தான் ஆளுநர் ஆர். எஸ். பாரதி விவகாரம் குறித்து ஆர். எஸ். பாரதி பேசியிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

 தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே படிக்காமல் சில பகுதிகளை தவிர்த்து தான் சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து ஆளுநர் படித்ததால் அப்போதே முதல்வர் அதற்கு எதிராக தீர்மானம் போட்டதால் ஆத்திரமடைந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.   வெளியே போ என்று திமுக எம்எல்ஏக்கள் அப்போது முழக்கம் எழுப்பினர்.  அதன் பின்னர் கெட் அவுட் ரவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றர் திமுகவினர்.  கெட் அவுட் ரவி என்று போஸ்டர்  ஒட்டியும் வருகின்றனர்.

க்

இந்த விவகாரம் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசிய வீடியோ ஒன்று வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில்,  ‘’ ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது சார்ஜ் என்று சொல்லிவிட்டு ஓடுகிற மாதிரி சட்டசபையில் பேசிவிட்டு ஓடி இருக்கிறார்.  கொஞ்சம் கண் ஜாடை காட்டி இருந்தா போதும் வீட்டுக்கு போய் இருக்க முடியுமா? கையில் எது கிடைக்கிறதோ அதை எடுத்து அடிச்சிருப்பான்’’என்றவர்,

‘’இதே ஜெயலலிதாவாக இருந்திருந்தால் அந்த ஆளு உதை வாங்காமல் போய் இருப்பானா?  எச்சில் இலை எடுக்கிறவங்க மாதிரி தான் ஆளுநர் வேலை.  உனக்கு சமையல்காரன் வேலை.  சமைச்சிட்டு போக வேண்டியதுதான். அதுக்காக சாப்பாடு எல்லாம் விட்டுட்டு வேற ஏதாவது கொண்டு வந்து விற்றால் பந்தியில் இருப்பவன் சும்மா இருப்பானா?’’ என்று ஆவேசமாக கேட்கிறார்.

அவர் மேலும்,   ’’ஆட்டுக்கு தாடி எதுக்கு நாட்டுக்கு கவர்னர் எதற்கு? என்று கேட்டார் அண்ணா.  அவர் இப்படி சொன்னதுக்காகவே அண்ணா பெயரை உரையில் பேசுவதை விட்டு விட்டார். பெரியார், காமராஜர், தமிழ்நாடு பெயர்களை எடுத்துவிட்டு பேசுகிற தைரியம் ... தைரியம் இல்ல அந்த ஆளு கை, கால் எல்லாம் உதறிடுச்சு. முதலமைச்சர் நினைத்திருந்தால் அவை முன்னவர் துரைமுருகன் மூலம் வார்டன்களை வைத்து வெளியேற்றி இருந்தால் என்ன கழற்றி இருப்பே நீ..’’ என ஆளுநரை விமர்சித்துள்ளார். 

 ஆர். எஸ். பாரதியின் இந்த பேச்சு ஆளுநரை மிக மோசமாக விமர்சித்து உள்ளார் என்று சர்ச்சை எழுந்திருக்கிறது .