"வாழப்பொறுக்க மனம் இல்லாதவர் ஓபிஎஸ்"

 
Admk

ஓபிஎஸ் மீது கொஞ்சம் கொஞ்சம் மரியாதை இருந்தது, ஆனால் அவரது செயல்பாடுகளுக்கு அப்புறம் அவை நீங்கி விட்டது என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்


குரு பூர்ணியா என்ற சிறப்பு நாள் இன்று. இனையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேட்டியளித்த அவர், அதிமுக தலைமை அலுவலகம் பூட்சி சீல் வைக்கப்பட்டுள்ளது குறித்து, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எப்பொழுதும் தெரிவிப்பது ஓபிஎஸ் ஒன்றும் தெரியாதது போல தான் பேசுவார், ஆனால் அவருக்கு வேறு முகம் உள்ளது. வாழப்பொறுக்க மனம் இல்லாதவர் ஓபிஎஸ். இதனை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் தீர்ப்பு வெளிவரவுள்ள நிலையில், கட்சி அலுவலகத்தை நோக்கி பேரணியாக வந்து, பின்னர் அமைதியான முறையில் தர்ணாவில் ஈடுபடுவது போன்று செயல்பட்டார். கட்சி அலுவலகம் அருகே நடந்தேரிய சம்பவத்திற்கு சிவகங்கை மாவட்ட ஆவின் சேர்மன் அசோகன் ஏற்பாட்டில் வைத்தியலிங்கம் தெரிவித்ததன் பேரில் அழைத்து வரப்பட்டனர். சாதி ரீதியாக கொண்டு போக வேண்டும் என்றெல்லாம் பேசி கடப்பாறை, கத்தி போன்ற பொருட்களுடம் வந்துள்ளார் ஓபிஸ். 


கோவிலாக நினைக்கக்கூடிய இடத்தை கடப்பாறை கொண்டு பூட்டை உடைத்து இருக்கிறார்கள். அருகில் தான் காவல் நிலையமும் உள்ளது.ஆனால் திமுக இதனை தூண்டிவிட்டு சில்லரை தன வேலையை செய்துள்ளது.

கடந்த வாரம் வரை ஓபிஎஸ் மீது, கொஞ்சம் சிறிய அளவில் மரியாதை இருந்தது. அது தற்பொழுது நீங்கிவிட்டது. வேண்டுமென்றால், பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வந்து கருத்துகளை தெரிவித்திருக்கலாம், அல்லது அமைதியாக இருந்திருக்கலாம். 

பொன்னையன் பேசிய ஆடியோ பதிவு குறித்து, கிருமினல் புத்தி உள்ளவர்கள், வேறு வழியில்லாத காரணத்தால் குழப்பத்தை ஏற்படுத்த இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தலைலை பதவி தனக்கு கிடைக்கவில்லை என்றால், கொட்டி கவிழ்க்க வேண்டும், தொண்டர்களை பற்றி கவலை படாத ஒருவராக ஓபிஎஸ் இருந்துள்ளார். 


கேசி பழனிசாமி ஜெயலலிதா இருந்த பொழுது முக்கிய பொறுப்பில் இருந்தார், அதன் பின் ஓபிஎஸ்யை நம்பி சென்றது, மண் குதிரையில் சவாரி செய்வது போல உள்ளது என தன்னிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறுனார்.