மாற்றுப்பாதையில் சென்று எடப்பாடியை முந்திய ஓபிஎஸ்

 
c

பொதுக்குழுவிற்கு வரமாட்டேன் யாரும் போகக்கூடாது என்று சொன்ன ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்பாகவே பொதுக்குழுவிற்கு சென்றுவிட்டார். எடப்பாடி பழனிச்சாமி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்க மாற்று பாதை வழியாக சென்று எடப்பாடியை முந்திவிட்டார் ஓபிஎஸ்.

cc

 தனக்கு சாதகமான சூழ்நிலை அமையப்போவதில்லை என்று நம்பிக்கை இழந்த ஓ. பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு யாரும் போக வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களுக்கு கடிதம் எழுதினார்.   ஆனால் நள்ளிரவில் நடந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் அதிமுக பொதுக்குழுவில் தனித் தீர்மானம் எதையும் நிறைவேற்றக் கூடாது முடிவெடுக்கக் கூடாது என்று தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின்னர் தனது ஆதரவாளர்களுடன் பொதுக்குழுவுக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக தனது வீட்டில் கோமாதா பூஜை நடத்திவிட்டு அதன் பின்னரே பொதுக்குழுவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

 எடப்பாடி பழனிச்சாமி  முன்னதாகவே பொதுக்குழுவுக்கு புறப்பட்டு விட்டாலும் அவர் சென்ற பாதை போக்குவரத்து நெரிசல், கட்சியினரின் வரவேற்பு ஒருபக்கம் இருக்க  நெடு நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார்.  இதை வரும் வழியிலேயே அறிந்த பன்னீர்செல்வம் மாற்றுப் பாதையில் சென்று எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னதாகவே பொதுக்குழு கூட்ட அரங்கத்திற்கு சென்றுவிட்டார் .

 வானகரத்தில் நடக்கும் பொதுக் குழுவால் சென்னையின் பல பகுதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகின்றன.   பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது . எடப்பாடி பழனிச்சாமி காலை 8 மணிக்கே தனது  வீட்டில் இருந்து புறப்பட்டு விட்டார்.  எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்ட சிறிது நேரம் கழித்து பன்னீர்செல்வம் தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். 

po

எடப்பாடி பழனிச்சாமி காரில் செல்ல,   ஓ பன்னீர்செல்வம் பிரச்சார வேனில் பொதுக்குழு கூட்டத்திற்கு சென்றார்.   எடப்பாடி பழனிச்சாமிக்கு வழிநெடுக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.   இதனால் அவர் பல இடங்களில் வாகனத்தை நிறுத்தி தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு சென்றார். இதனால் அவர் பொதுக்குழுவுக்கு தாமதமாக செல்ல நேரிட்டது.   மேலும் அவர் சென்ற  பாதை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.  

 மதுரவாயல் , வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே எடப்பாடி பழனிச்சாமியும்,  ஓ. பன்னீர்செல்வமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்கள். அப்போது பன்னீர்செல்வம்  மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்தார்.   மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்தன்மூலம் ஓ.  பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்பாகவே 10:15 க்கு பொதுக்குழு நடைபெற்ற இடத்தை அடைந்தார்.   அதன் பின்னரே போக்குவரத்து நெரிசலை சமாளித்து தொண்டர்களின் வரவேற்பை ஏற்று தாமதமாகவே பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தார் எடப்பாடி.