அசாதுதீன் ஓவைசி முகமது அலி ஜின்னாவின் பி டீம், அவர் ஜின்னாவின் சித்தாந்தத்தை நாடு முழுவதும் விதைக்கிறார்.. கிரிராஜ் சிங்

 
கடைசி நொடி வரை திட்டமிடாத, அரசியலமைப்புக்கு விரோதமான லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது….. மத்திய அரசு மீது அசாதுதீன் ஓவைசி தாக்கு

அசாதுதீன் ஓவைசி முகமது அலி ஜின்னாவின் பி டீம், அவர் ஜின்னாவின் சித்தாந்தத்தை நாடு முழுவதும் விதைக்கிறார் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டினார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அசாதுதீன் ஓவைசி முகமது அலி ஜின்னாவின் பி டீம். அவர் 2022 பீகாரில் உள்ள சீமாஞ்சல் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை பெற்றார். ஓவைசி ஜின்னாவின் சித்தாந்தத்தை நாடு முழுவதும் விதைக்கிறார். இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு இடையேயான சித்தாந்த வேறுபாடுகளை அவர் விதைத்து வருகிறார். 

கிரிராஜ் சிங்

குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதமர் மோடியை அசிங்கப்படுத்தி வருகின்றன. மல்லிகார்ஜூன் கார்கே இப்போது பிரதமர் மோடியை ராவணன் என்று கூறியுள்ளார். டிசம்பர் 8ம் தேதி பா.ஜ.க.வுக்கு மூன்றில் இரண்டு உத்தரவுகளை (பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி) வழங்குவதன் மூலம் குஜராத் ம்ககள் இந்த அவமானத்திற்கு தகுந்த பதிலளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். 

முகமது அலி ஜின்னா

ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது நாட்டை துண்டாட விரும்பும் கும்பலை சேர்ந்தவர்களை சந்தித்து வருகிறார். ராகுல் காந்தியின் யாத்திரை இந்திய பிரிவினை மற்றும் நாட்டை துண்டாட விரும்பும் கும்பலின் ஒற்றுமை யாத்திரை . ராகுல் காந்தி விரக்தியடைந்துள்ளார். நாட்டு மக்கள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.