ராகுல் காந்தியை ஒரு வெற்றிக்கரமான தலைவராக மாற்ற முயற்சித்தோம், ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லை... குலாம் நபி ஆசாத்

 
ராகுல் காந்தி

ராகுல் காந்தியை ஒரு வெற்றிக்கரமான தலைவராக மாற்ற முயற்சித்தோம், ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லை என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

சுமார் 50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பயணித்த அந்த கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த கட்சியிலிருந்து வெளியேறினார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதனையடுத்து, குலாம் நபி ஆசாத்தின் மரபணுவில் மோடி கலந்து விட்டார், பத்மபூஷன் விருது பெற்றதற்கு கைமாறாக இதனை செய்தது போல் உள்ளது என்று காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அவரை குற்றம்சாட்டினார். இந்நிலையில், குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மோடி ஒரு சாக்கு, ஜி 23 கடிதம் எழுதப்பட்டதில் இருந்து அவர்களுக்கு (காங்கிரஸ் தலைமை) என்னுடன் ஒரு பிரச்சினை  இருந்தது. தங்களுக்கு யாரும் கடிதம் எழுதுவதையோ, தங்களை கேள்வி கேட்பதையோ அவர்கள் ஒரு போதும் விரும்பவில்லை. 

சூடு பிடிக்கும் கடித விவகாரம்….. குலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் காங்கிரஸ்காரர்கள்

பல (காங்கிரஸ்) கூட்டங்கள் நடந்தன, ஆனால் ஒரு பரிந்துரை கூட எடுக்கப்படவில்லை. கடிதம் எழுதுவதற்கு முன்பும் பின்பும் நான் 6 நாட்கள் தூங்கவில்லை, ஏனென்றால்  நாங்கள் கட்சிக்காக ரத்தம் கொடுத்தவர்கள்.  இன்று அங்குள்ள மக்கள் (காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள்) பயனற்றவர்கள். எங்களை பற்றி அறியாத காங்கிரஸூக்கு  இப்படிப்பட்ட செய்தி தொடர்பாளர்கள் இருப்பது வருத்தம் அளிக்கிறது. மோடியிடம் சிக்கியது நான் அல்ல, அவர்தான் ( சில ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டிப்பிடித்தார்). காங்கிரஸில் படிப்பறிவில்லாதவர்கள் ஏராளம் குறிப்பாக மதகுரு வேலைக்கு அமர்பவர்கள். 

காங்கிரஸ்

பா.ஜ.க.வின் தொகுதிகளில் என்னால் ஒரு ஓட்டு கூட அதிகாிக்க முடியாது, என்னுடைய தொகுதியில் அவர்களால் (வாக்கு அதிகரிப்பு) அதை செய்ய முடியாது என்பது ஜம்மு அண்ட் காஷ்மீரை தெரிந்தவர்களுக்கு தெரியும். சோனியா காந்தி மீது எனக்கு  30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே மரியாதை இப்போதும் உள்ளது. இந்திரா காந்தியின் குடும்பத்துக்கு, ராஜீவ்-சோனியா காந்தியின் மகன் என்பதற்கான அதே மரியாதை ராகுல் காந்திக்கு இப்போதும் அளிக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவர் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன். நாங்கள் அவரை ஒரு வெற்றிக்கரமான தலைவராக மாற்ற முயற்சித்தோம், ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லை. பிரதமர் மோடியை ஒரு கசப்பான மனிதர் என்று நான் நினைத்தேன், ஆனால் அவர் மனிதாபிமானத்தை (மாநிலங்களவையில்  மோடியின் குலாம் நபி ஆசாத் பிரிவு உபச்சார உரை) காட்டினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.