ஜம்மு காஷ்மீரில் நடந்த சம்பவங்களுக்கு பாகிஸ்தானும், தீவிரவாதமும் தான் காரணம்... குலாம் நபி ஆசாத்

 
குலாம் நபி ஆசாத்

ஜம்மு காஷ்மீரில் நடந்த சம்பவங்களுக்கு பாகிஸ்தானும், தீவிரவாதமும் தான் காரணம் என குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

990ன் தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். பண்டிட் சமூகத்தினர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, அனுபம் கெர், தர்ஷன் குமார் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படம் குறித்து மாறுப்பட்ட கருத்துகள் அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ளது. இந்த சூழ்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடந்த சம்பவங்களுக்கு பாகிஸ்தானும், தீவிரவாதமும் தான் காரணம் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்க்க அரை நாள் விடுமுறை.. அசாம் அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: மகாத்மா காந்தி மிகப்பெரிய இந்து மற்றும் மதச்சார்பற்றவர் என்று நான் நம்புகிறேன். ஜம்மு காஷ்மீரில் நடந்த சம்பவங்களுக்கு பாகிஸ்தானும், தீவிரவாதமும் தான் காரணம். அது இந்துக்கள், காஷ்மீர் பண்டிட்டுகள், காஷ்மீரி முஸ்லிம்கள், டோக்ராக்கள் அனைவரையும் பாதித்துள்ளது.

பாகிஸ்தான்

அரசியல் கட்சிகள் மதம், சாதி மற்றும் பிற விஷயங்களின் அடிப்படையில் 24x7 பிளவுகளை உருவாக்கலாம். என்னுடைய கட்சி (காங்கிரஸ்) உள்பட எந்த கட்சியையும் நான் மன்னிக்கவில்லை. சிவில் சமூகம் ஒன்றாக இருக்க வேண்டும். சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.