ஜம்மு அண்ட் காஷ்மீரில் தேர்தல் நடந்தால் எல்லாம் சரியாகி விடும்.. குலாம் நபி ஆசாத்..

 
குலாம் நபி ஆசாத்

ஜம்மு அண்ட் காஷ்மீரில் தேர்தல் நடந்தால் எல்லாம் சரியாகி விடும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

2018 ஜூன் மாதத்தில் மாநிலமாக அந்தஸ்தில் இருந்த ஜம்மு அண்ட் காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கூட்டணி அரசில் இருந்து பா.ஜ.க. விலகியதால் அங்கு ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து அதுமுதல் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. இந்த சூழ்நிலையில், மோடி அரசாங்கம் 2019 ஆகஸ்டில்  ஜம்மு அண்ட் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு அண்ட் காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. தற்போது ஜம்மு அண்ட் காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஒரு சட்டப்பேரவையுடன் குடியரசு தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளது.

பா.ஜ.க.

ஜம்மு அண்ட் காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என அதிகாரிகள் பலமுறை உறுதி அளித்தனர். இருப்பினும் அதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அதேசமயம் இன்னும் சில தினங்களில் எல்லை நிர்ணய ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை இன்னும் சில நாட்களில் சமர்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜம்மு அண்ட் காஷ்மீரில் தேர்தல் நடந்தால் எல்லாம் சரியாகி விடும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம்

குலாம் நபி ஆசாத் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீரில் தேர்தல் நடந்து, மக்கள் கையில் அதிகாரம் வழங்கப்பட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நான் நம்புகிறேன். இறுதியாக கோவிட்-19-லிருந்து சிறிது நிவாரணம் பெறுவது மகிழ்ச்சியான விஷயம். (தொழுகைக்கான இடத்தில்) இட நெருக்கடி காரணமாக மக்கள் சாலையை அடைந்தனர். வெறுப்பின் சுவர்கள் நிச்சியமாக உடைந்து போகலாம் என தெரிவித்தார்.