அரசியலிருந்து ஓய்வு பெறுகிறாரா?.. குலாம் நபி ஆசாத் சூசக பேச்சு

 
கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் பா.ஜ.க.வில் சேர வேண்டும்… பா.ஜ.க.வுக்கு ஆள் பிடிக்கும் ராம்தாஸ் அத்வாலே

நான் ஓய்வு பெற்று சமூக சேவை செய்ய தொடங்கினேன் என்று திடீரென்று உங்களுக்கு தெரிய வருவது பெரிய விஷயமல்ல என்று குலாம் நபி ஆசாத் பேசியிருப்பது அவர் அரசியலிருந்து ஓய்வு பெற விரும்புவதை மறைமுகமாக வெளிப்படுத்துவதாக உள்ளது என பேசப்படுகிறது.

ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் குலாம் நபி ஆசாத் பேசுகையில் கூறியதாவது: இந்தியாவில் அரசியல் மிகவும் அசிங்கமாகி விட்டது. சில நேரங்களில் நாம் மனிதர்களா என்று ஒருவர் சந்தேகிக்கும் நிலை உள்ளது.

காந்தி

மகாத்மா காந்தி மிகப்பெரிய இந்து, மதச்சார்பின்மையை பின்பற்றுபவர். எனவே மதத்தை உண்மையாக பின்பற்றுபவர் எவரும் உண்மையிலேயே மதச்சார்ப்பற்றவர். நாம் அனைவரும் முதலில் மனிதர்கள், அதன் பிறகுதான்  இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள். ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பெரும் பங்கு வகிக்கும்  தீவிரவாதம் மக்களின் வாழ்க்கையை அழித்து விட்டது. காஷ்மீர் பண்டிட்டுகள், காஷ்மீர் முஸ்லிம்கள் என பலரையும், பாதுகாப்பு பணியாளர்களையும், காவல் துறையினரையும் கொண்டு பல விதவைகளை விட்டு சென்றுள்ளனர்.

காஷ்மீர் பண்டிட்கள்

வாக்கு வங்கிக்காக மக்களை பிரிக்கும்  அரசியல்வாதிகளால்தான் சமூகத்தில் 90 சதவீத தீமைகள் ஏற்படுகின்றன. எந்த அரசியலாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகம். அநீதி அல்லது அடக்குமுறைக்கு எதிராக சிவில் சமூகம் தலைமை தாங்கி மக்களை அணி திரட்ட வேண்டும். சமுதாயத்தில் மாற்றம் வர வேண்டும். சில நேரங்களில் நான் நினைக்கிறேன், நான் ஓய்வு பெற்று சமூக சேவை செய்ய தொடங்கினேன் என்று திடீரென்று உங்களுக்கு தெரிய வருவது பெரிய விஷயமல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.