நான் ஒரு போதும் மீண்டும் காங்கிரஸில் சேரமாட்டேன்... குலாம் நபி ஆசாத் உறுதி

 
குலாம் நபி ஆசாத் காஷ்மீருக்கு செல்லலாம்: உச்ச நீதி மன்றம்.

நான் ஒரு போதும் மீண்டும் காங்கிரஸில் சேரமாட்டேன் என்று குலாம் நபி ஆசாத் உறுதிபட தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த  குலாம் நபி ஆசாத் அண்மையில்  அந்த கட்சியிலிருந்து வெளியேறினார். மேலும், கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் ஜனநாயக ஆசாத் என்ற புதிய கட்சியை தொடங்கினார். குலாம் நபி ஆசாத் காங்கிரஸிலிருந்து வெளியேறியது முதல் அவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் குலாம் நபி ஆசாத் பேட்டி ஒன்றில், நான் காங்கிரஸில் இருந்து பிரிந்திருந்தாலும், அவர்களின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானவன் அல்ல. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என தெரிவித்தார்.

காங்கிரஸ்

குலாம் நபி ஆசாத்தின் இந்த கருத்து அவர் மீண்டும் காங்கிரஸில் இணையலாம் என்று பேச்சு அடிப்பட்டது. ஆனால் அதனை குலாம் நபி ஆசாத் மறுத்துள்ளார். குலாம் நபி ஆசாத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் மீண்டும் பழைய வீட்டுக்கு (காங்கிரஸ் கட்சி) செல்ல மாட்டேன், நான் ஒரு போதும் காங்கிரஸில் சேரமாட்டேன். ஜனநாயக ஆசாத் கட்சி மூலம் எனது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். ஜம்மு அண்ட் காஷ்மீர் முதல்வராக நான் இருந்த காலத்தை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். எனது ஆட்சியில் மாநிலம் பெரிய வளர்ச்சி கண்டது.  

காஷ்மீர் பண்டிட் குடும்பங்களின் துயரங்களை நாடு ஒரு போதும் மறக்காது… ராகுல் காந்தி

ஜம்மு அண்ட் காஷ்மீர் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஜம்மு மற்றும் காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீடட்டெடுப்பது, பூர்வீக குடிகளுக்கான நிலம் மற்றும் வேலைகளை பாதுகாத்தல் மற்றும் புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்களின் மறுவாழ்வு ஆகியவை எனது கட்சியின் முக்கிய செயல்திட்டமாக இருப்பதால், மக்களின் ஆதரவை பெற முடியும். காஷ்மீரி பண்டிட்களின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. அவர்களை உடனடியாக ஜம்முவுக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.