மீண்டும் ஆதரவாளர்களுடன் எடப்பாடி! வழக்கறிஞர்களும் பங்கேற்பு!

 
ஏ

பொதுக்குழுவை நடத்தி அதில் தான் பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்திருக்க,  பொதுக்குழுவையே  நடத்தக் கூடாது என்று ஓபிஎஸ் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.   இந்த சட்டப் போராட்டத்தை எப்படி முறியடிப்பது என்று எடப்பாடியும் சட்டப் போராட்டத்திற்கு தயாராக இருக்கிறார்.  இது குறித்து தனது ஆதரவாளர்களுடனும் வழக்கறிஞர்களுடனும் தினமும் ஆலோசனை நடத்தி வந்தார் எடப்பாடி.

 திடீரென்று அவரது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சென்னை  அடையாறு சாலையில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிச்சாமி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.   இதனால் கடந்த சில நாட்களாக யாரும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவில்லை.

எட்ட்

 முன்னாள் அமைச்சர்கள் பலரும் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க சென்ற போது அவரது மனைவிக்கு கொரோனா என்றதும் அப்படியே திரும்பி சென்று விட்டனர்.  இந்த நிலையில் நிலைமை கொஞ்சம் சரியானதும் மீண்டும் தனது ஆதரவாளர்களை சந்திக்க ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி.

 அதே நேரம் பொதுக்குழுக்கான தேதியும் நெருங்கி விட்டதால்,   பொதுக்குழுக்கான அரங்கமும் தயாராகி வருவதால் சட்டப் போராட்டத்தை முறியடித்து எப்படி பொதுக்குழுவை நடத்துவது என்று மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.   எஸ். பி. வேலுமணி, காமராஜ், தங்கமணி, விஜயபாஸ்கர், சி.வி சண்முகம், கேபி அன்பழகன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தியுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று காலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

 இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் எப்படி பதிலடி கொடுத்து வெற்றி பெறுவது என்பது குறித்து தனது வழக்கறிஞர்களிடமும் ஆலோசனை நடத்தி இருக்கிறார் எடப்பாடி.