மாஜியின் பார்வையில் பொதுக்குழு தடபுடல் விருந்து
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை மறுநாள் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது . இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கட்சியின் மூத்த நிர்வாகிகள் நேரில் சென்று மண்டபத்தில் தயாராகும் ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர் .
2750 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி இல்லாததால் ஆயிரம் இருக்கைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பொதுக்குழுவில் பங்கேற்க சைவ மற்றும் அசைவ உணவு, தண்ணீர் பாட்டில், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் தலைமையில் நடந்து வருகிறது.
ஜெயலலிதா காலத்தில் கூட்டப்படும் அதிமுக பொதுக்குழுவில் மதிய உணவாக பிரம்மாண்ட அசைவ உணவு விருந்து படைக்கப்பட்டிருக்கிறது. கட்சியினர் நினைத்து நினைத்து பேசக்கூடிய அளவிற்கு இந்த பிரமாண்ட விருந்து பறிமாறப்பட்டு வந்திருக்கிறது. சிக்கன், மட்டன், மீன் என்று அனைத்தும் இந்த சைவ விருந்தில் இருந்திருக்கின்றன.
பொதுக்குழுவில் இப்படி சாப்பிட்டு பழக்கப்பட்ட உறுப்பினர்கள், ஜெ.வின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி 2017 ஆம் ஆண்டில் கூட்டிய பொதுக்குழுவின் போது பெரும் ஏமாற்றமடைந்தனர் உறுப்பினர்கள். காலை ,மதியம் இரண்டு வேளையும் சைவம்தான். காலையில் இட்லி, வடை, மூன்று வகை சட்னி ,பொங்கல் என்று டிபன் முடிந்தது. மதியமும் வெஜிடபிள் பிரியாணி, சாதம் , சாம்பார், ரசம் மோர், தயிர் ,வடை , பால்பாயசம் அவியல், வருவல், பொறியல் ,வாழைப்பழம் ,ஐஸ்கிரீம் ஜாங்கிரிஎன்று அனைத்தும் சைவமா முடிந்தது.
பிரியாணியும், மட்டன், வஞ்சரம் மீனும் இல்லை என்பதால் பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். ஜெயலலிதா இருந்தபோது பொதுக்குழு என்றாலே விருந்து சாப்பாடு தடபுடலாக இருக்கும். மட்டன் கறி, வஞ்சிரம் மீன் வறுவல் என்று சைவ சாப்பாடு வாயில் எச்சில் ஊற வைக்கும். கட்சிக்காரர்களை சாப்பாடு விஷயத்தில் திருப்திபடுத்த ஜெயலலிதா போல் யாராலும் முடியாது என்ற பேச்சு இருந்தது.
ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத்தலைமை தீர்மானத்தை கொண்டுவர நினைக்கும் நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் இந்த பொதுக்குழுவில் சைவம் மற்றும் அசைவம் இரண்டுமே தடபுடலாக படைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்கிறார்கள்.