அவர்கள் எனக்கு அண்ணன் தம்பி மாதிரி - துபாய் விசிட் சர்ச்சை குறித்து காயத்ரி ரகுராம் விளக்கம்

 
க்ய

காயத்ரி ரகுராமின் துபாய் விசிட் குறித்த சர்ச்சை சலசலப்பு பாஜகவில் நிறுத்திக் கொண்டே இருந்தது இந்த நிலையில் பாஜகவை விட்டு விலகுவதாக அறிவித்துவிட்டார் காயத்ரி ரகுராம் நிலையில் பாஜக காயத்ரி கிராமம் துபாய் விசித் சர்ச்சை குறித்து அவரை துபாய்க்கு அழைத்த பாஜக நிர்வாகிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது .

அந்த கடிதத்தில், நான்  16. 10. 2022 அன்று துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தமிழ்நாடு கவுன்சிலிங் ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்க இருந்தேன். இதன் தொடக்க விழாவிற்கு பாஜகவின் வெளிநாடு வாழ் தமிழர் நலப் பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராமை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தேன்.  அவரும் வருவதாக ஒப்புக்கொண்டார்.   சொந்த வேலை காரணமாக பதவி ஏற்கும் நாளுக்கு முன்கூட்டியே 11. 10.2022 அன்று துபாய் வந்துவிட்டார்.  அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது,  பர்சனல் விஷயமாக வந்திருக்கிறேன்.  நண்பர் அறையில் தங்க உள்ளதாக தெரிவித்தார்.  வெளிநாடு வாழ் தமிழர் நலன் மாநிலத் துணைத் தலைவர் சசிகுமார்,  மாநிலச் செயலாளர் சிவி சக்கரவர்த்தி ஆகியோரும் அவருடன் வந்திருந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

டி

மேலும்,  கட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு கேளிக்கை கொண்டாட்டங்கள்,  திமுக நிர்வாகிகளின் சந்திப்பு இவைகளை மையமாகக் கொண்டிருந்தது அவரின் செயல் . இதற்கு மாநில செயலாளர் சிபி சக்கரவர்த்தி,  மாநிலத் துணைத் தலைவர் சசிகுமார் இணைந்து குத்தாட்டத்தில் மிதந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து காயத்ரிரகுராம் அளித்துள்ள விளக்கத்தில்,  ‘’துபாயில் நான் என்ன செய்தேன் என்று 150 நிர்வாகிகள் முன்பு என்னை பற்றி கொச்சையாக பேசினார் அண்ணாமலை.  திமுக பிரமுகர்களோடு என்னை ஒப்பிட்டுப் பேசினார்.  நான் போனது இரண்டு பாஜக நிர்வாகிகளோடு . அவர்கள் எனக்கு அண்ணன் தம்பி மாதிரி. 

 நானும் அண்ணாமலையும் மட்டும் நேரடியாக உட்கார்ந்து பேச வேண்டிய விஷயத்தை 150 பேர் முன்னிலையில் பேசினார்.  கடந்த இரண்டு வருடமாக தான் பாஜகவில் ஆடியோ , வீடியோ சர்ச்சை இருக்கிறது.  இதனால் நிறைய பெண்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.  கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்த பின்னர் எப்படி எல்லாம் என்னை அசிங்கப்படுத்தலாம் என்று காரணம் கண்டுபிடித்தார்கள்.  எனக்கு ஒரு அண்ணனாக இருந்து அண்ணாமலை ஆதரவு தெரிவித்து இருக்க வேண்டும். என்னை கட்சியில் அனாதையாக்கி விட்டு விட்டார்கள் . அண்ணாமலை என்னிடம் நேரடியாக வந்து பேச சொல்லுங்க.  ஆனால் இன்று வரை என்னிடம் அவர் நேரடியாக பேசவில்லை.  என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் நூறு சதவிகிதம் அண்ணாமலை தான்’’ என்று கூறி இருக்கிறார்.