அடங்காப்பிடாரி காயத்ரி ரகுராம் துபாயில் அடித்த கூத்து.. அவர் திமுகவின் கைக்கூலி.. டைகர் ரவி பரபரப்பு கடிதம்

 
du

 சென்னை சோமர் செட் ஓட்டலில் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை ஒரு மணி நேரத்திற்கு மேல் சந்தித்து காயத்ரி ரகுராம் ஆலோசனை நடத்தினார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார்.  அந்த சந்திப்பை காயத்ரி  ஒப்புக்கொண்டார். ஆனாலும் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று சொல்லி இருந்தார்.  இதை அடுத்து துபாயில் காயத்ரி ரகுராம் அடித்த கூத்துகளையும் திமுக நிர்வாகிகளுடன் கைகோர்த்துக்கொண்டு அவர் சுற்றியதையும் பாஜகவினர் மத்தியில் அண்ணாமலை பேசியதாக கொதித்து எழுந்திருந்தார் காயத்ரி ரகுராம்.

ti

 துபாயில் அப்படி நான் யாரை சந்தித்தேன்.  ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என்று அவர் கூறியிருந்தார்.  அண்ணாமலை மீதான அடுக்கடுக்கான புகார்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு  விலகுவதாக அறிவித்துவிட்டார். 

 இந்த நிலையில் காயத்ரி ரகுராம் துபாய் சென்றதற்கான ஆதாரங்களும்,  துபாயில் திமுக பிரமுகர்களுடன் சுற்றியதற்கான ஆதாரங்களும் வெளிவந்திருக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தின் தமிழ்நாடு கவுன்சிலிங் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் டைகர் ரவி என்கிற ரவிச்சந்திரன் அண்ணாமலைக்கு அனுப்பியிருக்கும் புகார் கடிதத்தில் இந்த விவரங்கள் அடங்கியிருக்கின்றன.

அந்தப் புகார் கடிதத்தில்,   ’’நான் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின்  ஐபிஎப் பிஜேபி தமிழ்நாடு கவுன்சிலிங் ஒருங்கிணைப்பாளராக 16. 10. 2022 முதல் சேவை செய்து வருகிறேன்.  கடந்த 25 வருடங்களாக நான் துபாயில் வசிக்கும் தமிழர்.  என் சொந்த ஊர் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி. 

a

 நான் கடந்த மாதம் 16. 10. 2022 அன்று துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தமிழ்நாடு கவுன்சிலிங் ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்க இருந்தேன். இதன் தொடக்க விழாவிற்கு பாஜகவின் வெளிநாடு வாழ் தமிழர் நலப் பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராமை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தேன்.  அவரும் வருவதாக ஒப்புக்கொண்டார்.   சொந்த வேலை காரணமாக பதவி ஏற்கும் நாளுக்கு முன்கூட்டியே 11. 10.2022 அன்று துபாய் வந்துவிட்டார்.  அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது,  பர்சனல் விஷயமாக வந்திருக்கிறேன்.  நண்பர் அறையில் தங்க உள்ளதாக தெரிவித்தார்.  வெளிநாடு வாழ் தமிழர் நலன் மாநிலத் துணைத் தலைவர் சசிகுமார்,  மாநிலச் செயலாளர் சிவி சக்கரவர்த்தி ஆகியோரும் அவருடன் வந்திருந்தார்கள்.

 12ஆம் தேதி காலை எட்டு முப்பது மணிக்கு  என்னை தொடர்பு கொண்டார் சிபி சக்கரவர்த்தி . உடனடியாக வந்து ஓட்டல் பில் ரெண்டு லட்சத்து 75 ஆயிரம் கட்டச் சொன்னார்கள்.  எனக்கு இது தவறாக தெரிந்தது.  அதாவது 11. 10 .2022 முதல் 18 .10 .202 2 வரையிலான நாட்களுக்கு அந்த பணத்தை கட்டச் சொன்னார்கள்.  நான் பணம் கட்ட மறுத்து விட்டேன் .  குறிப்பிட்ட தொகை மட்டும் கட்டுவதற்கு தயாராக உள்ளேன். ஆனால் மொத்த தொகையையும் என்னால் சற்று செலுத்த முடியாது என்று தெளிவாக கூறிவிட்டேன். 

இதனால் கோபப்பட்டு காயத்ரி ரகுராம் கேவலமாக சொல்ல முடியாத அசிங்கமான வார்த்தைகளால்,  இந்த வார்த்தைகளை  சொல்வதற்கு நா கூசுகின்றன.  ஆனால் அந்த அம்மா அந்த வார்த்தைகளை சகஜமாக திட்டினார்.  வாய்க்கு வந்தபடி அசிங்கமாக பேசினார்.  நான் அனைத்தையும் பொறுமையாக வாக்குவாதம்  எதுவும் செய்யாமல் கட்சியின் நலன் கருதி அமைதியாக இருந்து விட்டேன். 

gyy

 பிறகு துபாயில் உள்ள திமுகவைச் சார்ந்த இஸ்லாமியர்களை வரவழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து வேறு சிலரிடம் துபாயின் ஐபிஎப் இன் ஒருங்கிணைப்பாளர் பதவியை எடுத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டு அவர்களை எடுத்துக் கொள்ளும்படி வற்புறுத்தினார்.  ஆனால் அவர்களுக்கு எல்லாம் என்னைப் பற்றி நன்றாக தெரியும் என்பதால் என்னை அழைத்து,  துவக்க விழா எந்த ஹாலில்  வைத்துள்ளீர்கள் நேரடியாக பார்வையிட வேண்டும் வா என்று சொன்னார்கள்.  உடன் அழைத்துச் சென்றேன். ஆனால் அந்த இடத்தை பார்த்து விட்டு சரியில்லை இந்த இடம் சரியாக இல்லை.  சிறிதாக உள்ளது.  என் பெயருக்கு இது கலங்கம் விளைவிக்கும் செயல். அண்ணாமலை வந்தால் இப்படித்தான் செய்வீர்களா? அவருக்கு மட்டும் ஆடம்பரமாக செய்கிறீர்களே என்று கோபப்பட்டார்.

 மீண்டும் என்னை கேவலப்படுத்தினார்.  அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்.  மீண்டும் அதே ஓட்டலில் ஆடம்பரமாக உள்ள பங்க்ஷன் காலில் புக் செய்து அவரை திருப்திப்படுத்தினேன்.

1.6 10 .2022 ஆம் நாள் அன்று அறிமுக விழாவில் காயத்ரி ரகுராம் என் மீது கொண்ட வெறுப்பால் என்னை ஒருங்கிணைப்பாளராக கருதாமல் தரம் தாழ்ந்து கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தாமல் கட்சியை பற்றியும் கட்சியினுடைய வளர்ச்சி பற்றியும் பேசாமல் தன்னுடைய வரலாறு தன்னுடைய நிகழ்ச்சிகள் பற்றியும் மட்டுமே பேசினார்.  அவசரமாக வேறு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.  அது பற்றி என்னால் சொல்ல முடியவில்லை.  கட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு கேளிக்கை கொண்டாட்டங்கள்,  திமுக நிர்வாகிகளின் சந்திப்பு இவைகளை மையமாகக் கொண்டிருந்தது அவரின் செயல் . இதற்கு மாநில செயலாளர் சிபி சக்கரவர்த்தி,  மாநிலத் துணைத் தலைவர் சசிகுமார் இணைந்து குத்தாட்டத்தில் மிதந்தார்கள்.

sa

தமிழகத்தில் எப்படியாவது திராவிட ஆட்சியை அகற்றிவிட்டு தாமரை தடம்பதித்திட உயிரையும் துச்சமாக எண்ணி கோபாலபுரம் கொத்தடிமைகள் அனைவரையும் துணிச்சலாக எதிர்த்து நின்று போராடிக் கொண்டிருக்கிற உங்களின்(அண்ணாமலை) கரங்களை இவர்கள் வலுப்படுத்தாமல் உங்கள் செயலுக்கு இழிவுபடுத்தக்கூடிய வகையில் இவர்களின் செயல்பாடுகள் உள்ளது என்பது வருத்தமளிக்கிறது.  தயவு செய்து இவர்கள் கட்சியை வளர்க்க விட்டாலும் பரவாயில்லை.  கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்ற இவர்கள் மாதிரியான புல்லுருவிகளை திமுக கைக்கூலிகளை உடனடியாக கலை எடுத்து கட்சியை காக்குமாறு பணிவோடு வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

 நா கூசும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் அடங்காப்பிடாரி பெண் குலத்துக்கே கேடு விளைவிக்கும் காயத்ரி ரகுராம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.