கலால், வகுப்பறை கட்டுமான ஊழல்கள் நடந்தாலும் தனக்கு தானே நேர்மைக்கான சான்றிதழை வழங்கிறார்.. கெஜ்ரிவாலை தாக்கிய பா.ஜ.க.

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லி  அரசாங்கத்தில் கலால் மற்றும் வகுப்பறை கட்டுமான ஊழல்கள் நடந்தாலும் தனக்கு தானே நேர்மைக்கான சான்றிதழை  வழங்கி வருகிறார் என்று அரவிந்த் கெஜ்ரிவாலை பா.ஜ.க. தாக்கியது.

பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் கண்புரை ஏற்பட்டுள்ளது அதனால்தான் பா.ஜ.க.வை நோக்கிய டெல்லி மக்களின் போக்கை அவரால் பார்க்க முடியவில்லை. மக்களின் குரலை கேட்க அவர் தயாராக இல்லை. டெல்லி முதல்வர் தனது அரசாங்கத்தில்  கலால் மற்றும் வகுப்பறை கட்டுமான ஊழல்கள் நடந்தாலும் தனக்கு தானே நேர்மைக்கான சான்றிதழை  வழங்கி வருகிறார். 

கவுரவ் பாட்டியா

அரசியல் சாதனப் பதவியை வகித்து, கல்வித்துறையில்  ஊழல்கள் நடந்தாலும் அமைதியாக அமர்ந்திருக்கும் அவர்கள் தங்களுக்கு சான்றிதழ்களை வழங்குவதில் ஆச்சரியமில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது உச்ச நீதிமன்றமே புலனாய்வு அமைப்புகளை  கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என்று  அழைத்தது. இந்த புலனாய்வு  அமைப்புகள் இப்போது ஊழல்வாதிகளை கட்டுப்படுத்த சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்படுகின்றன. அதனால்தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புலனாய்வு அமைப்புகளுடன் சிக்கல்கள் இருக்கலாம்.  

சி.பி.ஐ., அமலாக்கத்துறை

ஊழல்வாதிகள் மற்றும் நேர்மையற்றவர்கள் யாரும் தப்பமாட்டார்கள் என்ற நாட்டின் அரசியல் சாசனத்தில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. புலனாய்வு அமைப்புகள்  மீது பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். விசாரணை அமைப்புகள் குறிப்பிட்ட நபரின் விருப்பப்படி செயல்படுவதாகவும் கெஜ்ரிவால் கூறினார். ஆனால் இப்போது கெஜ்ரிவாலின் வார்த்தைகளில் மாற்றம் அவரது மனநிலையை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.