ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.. பா.ஜ.க. வலியுறுத்தல்

 
ராகுல் காந்தி

இந்திய-சீன எல்லை விவகாரம் தொடர்பான தனது கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது. ஆனால், நமது மத்திய அரசு அதனை கண்டுகொள்ளாமல் தூங்கி வருகிறது. இந்திய பிராந்தியத்தின் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்து விட்டது. அண்மையில் அருணாசல பிரதேச எல்லையில் சீன படையினரால் நமது வீரர்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பான பல உண்மைகளை மத்திய அரசு மூடி மறைக்கிறது என்ற மத்திய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

கவுரவ் பாட்டியா

இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது: ராகுல் காந்தி தனது வீட்டில் ஏ.சி. அறையில் அமர்ந்திருக்கும் போது, நமது பிரதமர் நரேந்திர மோடியும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தீபாவளியன்று எல்லையில் ராணுவத்துடன் நிற்கிறார்கள். ராகுல்  காந்தி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இருப்பினும் இந்த அறிக்கைகள் (ராகுல் காந்தியின் கருத்துக்கள்) மன்னிக்க முடியாதவை. 

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகல் காந்தியை நீக்கம் செய்ய வேண்டும். ராகுல்  காந்திக்கு எதிராக அவர் செயல்படவில்லை என்றால், இது காங்கிரஸின் சிந்தனையும் கூட என்பது தெளிவாகும். பாதுகாப்பு படையினர் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்க பிரதமர் மோடி அரசு சுதந்திரம் அளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.