டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலில் சாதனை படைத்து வருகிறார்... கவுரவ் பாட்டியா தாக்கு

 
கட்சியை பார்த்து ஓட்டு போடாதீங்க! டெல்லி நலனுக்காக வாக்களிங்க….. மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலில் சாதனை படைத்து வருகிறார் என்று பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தாக்கினார்.

டெல்லியின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஐ.ஏ.எஸ். அதிகாரி, மூத்த அதிகாரிகளுக்கு சொந்தமான 31 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.  இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியும், பா.ஜ.க.வும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி வருகின்றனர்

கவுரவ் பாட்டியா

டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலில் சாதனை படைத்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் மற்றும் வெறித்தனமான நேர்மையற்ற தன்மையை பா.ஜ.க. கடுமையாக அம்பலப்படுத்தி வருகிறது. கெஜ்ரிவாலின் ஆணவத்தை டெல்லி மக்கள் உடைத்தெறிவார்கள். பொதுமக்களின் கேள்விகளுக்கு கெஜ்ரிவால் பதிலளிக்கவில்லை. மக்களின் கேள்விகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவிடம் பதில் இல்லை என்பது தெளிவாகி விட்டது. 

ஆம் ஆத்மி

அரவிந்த் கெஜ்ரிவால் ஜி, நீங்கள் நேர்மையாக இருந்தால் பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கிறீர்கள். 24 மணி நேரத்துக்கு பிறகு (மணிஷ் சிசோடியாவின் டிவிட்) ஒரு டிவிட் வெளியிடப்பட்டது. அதிலும் அதே முட்டாள்தனம். டெல்லி கலால் கொள்கை குறித்த குழு பரிந்துரைத்தவற்றிலும், ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியவற்றிலும் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. 32 மண்டலங்களில் சில்லரை விற்பனையில் ஒப்பந்தத்திற்கு லாட்டரி முறை பின்பற்றப்பட வேண்டும், ஆனால் அதை கெஜ்ரிவால் அரசு செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.