திமுகவில் கேட் திறக்கவில்லை..அரசியல் அனாதையாகி விடுவோமோ.. ?அப்செட்டில் சரவணன்!

 
ச

 பிடிஆரும் மதுரை திமுகவினரும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர் என்பதை உணர்ந்து கொண்ட டாக்டர் சரவணன் மதுரையில் தொடர்ந்து தொழில்நுடத்த இவர்களின் இத்தனை எதிர்ப்பு ஆகாது என்பதை உணர்ந்து நேரில் சென்று பிடிஆரிடம் மன்னிப்பு கேட்டு பாஜகவில் இருந்து விலகுவதாக சொல்லி விட்டார்.  அடுத்து அவர் மீண்டும் திமுகவில் சேர்க்கப்படலாம் என்ற பேச்சு இருந்தது.  ஆனால் தற்போதைய சூழ்நிலை பார்த்தால் திமுகவில் அவர் இணைய வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

இதனால்,   எங்கே தான் அரசியல் அனாதையாகி விடுவோமோ என்று அப்செட்டில் இருப்பதாக பேச்சு பரவுகிறது.  ஆனால், டாக்டர் சரவணன் மருத்துவமனை தொழில் நன்றாக போய்க்கொண்டிருப்பதால் தான் அவர் சினிமாவுக்கும் அரசியலுக்கும் வந்தார்.  அந்த தொழிலுக்கே அதாவது பேஸ்மெண்டுக்கு பிரச்சனை என்றால் தாங்காது  என்பதற்காகத்தான் அவர் பிடிஆரிடம் சரணடைந்தார்.   மற்றபடி திமுகவில் அவரை சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.  அவரை மருத்துவத் துறையில் நிம்மதியாக இயங்க விட்டாலே போதும் என்கிறார்கள் சரவணன் ஆதரவாளர்கள்.

வ்ச்

 மதுரை மாவட்டத்தில் நரிமேடு பகுதியில் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நடத்தி வருகிறார் டாக்டர் சரவணன்.  இந்த மருத்துவமனை மூலம் பல ஏழை ,எளியவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் அளித்து வருகிறார்.  இதன் மூலம் மதுரை சுற்று வட்டார மக்களிடையே நன்கு பரீட்சயமாகி இருந்த டாக்டர் சரவணன் ,  சினிமாவில் சில படங்களில் நடித்து வந்தார். 

அரசியல் ஆர்வத்தில்  மதிமுகவிற்கு சென்று அக்கட்சியில்  நீண்ட காலம் இருந்து வந்தார்.   அதன் பின்னர் அவர் திமுகவில் இணைந்து 2019 ஆம் ஆண்டில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.  திமுகவும்  தலைமை மாநில அளவில் அவருக்கு பொறுப்பு வழங்கியது.   மாநில மருத்துவர் அணியில் இடம் பெற்றிருந்தார்.  ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட ஆர்வமாக இருந்த போது,  திமுக தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த சரவணன் பாஜகவில் அப்போதைய மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் இணைந்தார்.  

ப்ச்

 அன்று மாலையே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.  ஆனால் அந்த தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை .  ஆனாலும் அதன் பின்னர் பாஜகவுக்காக மதுரையில் தீவிர வேலைகள் செய்து வந்தார் .  பாஜகவுக்காக இவர் பார்த்து வரும் வேலைகளை எல்லாம் பார்த்து மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள் எரிச்சலையில் இருந்திருக்கிறார்கள்.

 இந்த நிலையில்  மறைந்த ராணுவ வீரர் லட்சுமண்  உடலுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர் பிடிஆர் வந்தபோது,  அங்கு நின்றிருந்த டாக்டர் சரவணன் உட்பட பாஜகவினரை பார்த்து,   இவர்களை எல்லாம் யார் இங்கே உள்ளே விட்டது? இவர்களுக்கு இங்கே உள்ளவரை என்ன தகுதி இருக்கிறது? என்று ஆவேசமாக சத்தம் போட,  அதில் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் பிடிஆர் காரை வழிமறித்து செருப்பை வீசி எதிர்ப்பை காட்ட,  இதில் மதுரை திமுக நிர்வாகிகள் மேலும் கொதிப்படைய,  எங்கே தனது மருத்துவமனை தொழிலுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்பதை உணர்ந்து பதறிய சரவணன்,  அன்று இரவே பி டி ஆர் வீட்டிற்கு சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டார்.  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது திமுகவில் இணையப் போகிறீர்களா என்ற கேள்விக்கு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ச்ச்

 உடனே திமுகவில் சேரப் போகிறீர்களா என்ற கேள்விக்கு அப்படி வாய்ப்பு வந்தால் அதில் ஒன்றும் இல்லை.  தாய் கலகத்தில் தானே போய் சேரப் போகிறேன்.  அந்த தாய்க்கழகத்திற்கு நான் 15 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன்.  மீண்டும் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பெருமை தான் என்று சொல்லிவிட்டு போனார்.  மறுநாள் காலையிலேயே கட்சியின் விதிகளை மீறி விட்டதாக பாஜகவில் இருந்து டாக்டர் சரவணனை நீக்கினார் அண்ணாமலை.

 இதன் பின்னர் உடனேயே டாக்டர் சரவணன் திமுகவில் இணையப்போகிறார் என்ற  எதிர்பார்த்து  இருந்தது.   ஆனால் போகப் போக அதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரிய வருகிறது.  டாக்டர் சரவணன் மீது மதுரை திமுக நிர்வாகிகள் கடும் எரிச்சலில் உள்ளார்களாம்.   மருத்துவ தொழிலில் சரவணனுக்கு நல்ல பெயர் இருந்தாலும் கட்சி ரீதியாக அவர் தொண்டர்களையும்,  பிற தலைவர்களையும் அனுசரித்து செல்லக்கூடிய ஆள் இல்லை என்கிறார்கள்.   இதனால் மதுரை திமுக நிர்வாகிகள் யாருக்கும் சரவணன் திமுக வில் சேர விருப்பம் இல்லையாம்.  

ப்

 ஒருவேளை தனக்காக பாஜகவில் இருந்து விலகினாரே என்று பி டி ஆர் திமுகவில் சேர்க்க நினைத்தாலும் ,  சரவணனை சேர்ப்பதால் மற்ற நிர்வாகிகளை பகைத்துக் கொ வருந்துவதாகவும், எங்கே தான்  அரசியல் அனாதயாகி விடுவோமோ? என சரவணன் அப்செட்டில் இருப்பதாக தகவல் பரவுகிறது.

 அதே நேரம் , மருத்துவமனை தொழில் நன்றாக போய்க் கொண்டிருந்ததால் தான் அவர் சினிமாவுக்கும் அரசியலுக்கும் வந்தார்.  இப்போது எதிர்ப்புகள் அதிகமாகி அந்த தொழிலுக்கே ஆபத்து வந்து விட்டால் பேஸ்மெண்டுக்கு பிரச்சனை என்றால் அது தாங்க முடியாது என்பதால் தான் பிடிஆரிடம் சரணடைந்திருக்கிறார்.  பாஜக போய்விட்டது அடுத்து திமுகவிலும் சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. அவரை பொறுத்தவரைக்கும் இப்போது மருத்துவமனை தொழில் போய்க்கொண்டிருந்தாலே போதும் என்ற மனநிலையில் தான் இருக்கிறார் என்கிறார்கள் டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள்.