காங்கிரஸின் ஊழல் கதைகள் அனைவரும் அறிந்ததே.. இமாச்சல பிரதேச பா.ஜ.க. தலைவர் கிண்டல்

 
கணேஷ் தத்

காங்கிரஸின் ஊழல் கதைகள் அனைவரும் அறிந்ததே என்று இமாச்சல பிரதேச பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கணேஷ் தத் விமர்சனம் செய்தார்.

இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க. அரசின் ஆட்சி  காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவுக்கு வருகிறது. எனவே அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தலை நவம்பர் 12ம் தேதி ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பா.ஜ.க.

எதிர்வரும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. இந்நிலையில், பா.ஜ.க. சிம்லாவில் புதிய கட்சி அலுவலகத்தை திறந்துள்ளது. அந்த கட்சியின் மூத்த தலைவர் கணேஷ் தத் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். கட்சி அலுவலக திறப்பு விழாவில் கணேஷ் தத் பேசுகையில் கூறியதாவது:

காங்கிரஸ்

இந்த (சிம்லா நகர்புற) தொகுதியில் பா.ஜ.க. நிச்சயமாக வெற்றி பெறும். நாங்கள் மாநிலத்தில் வலுவான ஆட்சியை அமைப்போம். தேர்தலில் போட்டியிட காங்கிரஸிடம் எந்த செயல் திட்டமும் இல்லை, அவர்களின் ஊழல் கதைகள் அனைவரும் அறிந்ததே. இவ்வாறு அவர் தெரிவித்தார். எதிர்வரும் சிம்லா சட்டப்பேரவை தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.