உதயநிதிக்கு செயலாளர் ஆகிறார் கான்வாயில் தொங்கிய ககன்தீப் சிங் பேடி
உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவி ஏற்கிறார். அவர் அமைச்சர் ஆனால் அவருக்கு ஒதுக்கப்படும் துறை செயலாளராக சென்னை மாநகராட்சி ஆணையர் ஆக இருக்கும் ககன் தீப் சிங் பேடியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கையில் 15 சதவிகிதம் பேர் அமைச்சராகலாம். என்கிற அடிப்படையில் முதல்வரோடு சேர்த்து 35 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற முடியும். அந்த வகையில் தற்போது அமைச்சரவையில் 33 பேர் உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் முதல்வர் தவிர்த்து அமைச்சர்களின் எண்ணிக்கை 34 ஆகிறது . முதல்வரோடு சேர்த்து 35 ஆகிறது. ஆக அமைச்சர்களின் முழு எண்ணிக்கை பூர்த்தியாகும் நிலையில் இருக்கிறது.
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதற்காக ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பர் ஹாலில் இந்த பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது என்று ஆளுநர் அலுவலகம் அறிவித்திருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் போது கொண்ட அவருக்கு ஒதுக்கப்படும் துறைச் செயலாளராக யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு ஆலோசனை, குழப்பங்களுக்கு இடையே உதயநிதி ஸ்டாலினுக்கு துறைச் செயலாளராக தற்போது சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருக்கும் ககன் தீப் சிங் பேடியை நியமிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் பரவுகிறது.
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் முதல்வர் கடந்த பத்தாம் தேதி அன்று ஆய்வு செய்தார். அப்போது முதல்வரின் கான்வாய் காரில் சென்னை மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் இளைய அருணா ஆகியோருடன் ககன் தீப் சிங் பேடியும் தொங்கியபடியே பயணம் செய்தார். அதற்குத்தான் இந்த பரிசா? என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.