வருங்கால பிரதமரே.. வருங்கால முதல்வரே... கடுப்பில் கூவும் காயத்ரி ரகுராம்

 
க்ய்

வருங்கால பிரதமரே என்று அண்ணாமலைக்காக கூவியிருக்கிறார் காயத்ரி ரகுராம்.  இத்தோடு விட்டிருந்தால் அவர் அண்ணாமலையை புகழ்கிறார் என்று சொல்லிவிடலாம். அடுத்து அவர், வருங்கால முதல்வரே..என்று கொஞ்சம் இறங்கி வந்து கூவுகிறார்.  இத்தோடு விட்டிருந்தாலும் புகழ்கிறார் என்றுதான் நினைக்கத்தோன்றும். ஆனால் அடுத்தடுத்து அவர் வருங்கால இந்திய பாதுகாப்பு அமைச்சரே, வருங்கால எம்.பியே, வருங்கால எம்.எல்.ஏ. என்று அடுக்கிக்கொண்டே போவதால் இது வஞ்சப்புகழ்ச்சியா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அண்ணாமலை மீதிருக்கும் கடுப்பில்தான் காயத்ரி ரகுராம் இப்படி கூவியிருக்கிறார் என்கிறார்கள்.

க்ய்ய்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ’’நமது வருங்கால பிரதமர் அல்லது இந்திய பாதுகாப்பு அமைச்சர் அல்லது எம்.பி. அல்லது சி.எம். அல்லது எம்.எல்.ஏ. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’’என்று கடுப்பில் கூவிய காயத்ரி ரகுராம்,  நம்பிக்கை யின்மையிலிருந்து நம்பிக்கை வரை,  இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு, அதிலிருந்து விஸ்வ குரு என்றும் புகழ்ந்து தள்ளியிருந்தார்.   எடுத்து வைக்கும் அடி ஒவ்வொன்றும் நிஜ சிங்கத்தின் வெளிப்பாடு என்றும் புகழ்ந்து தள்ளியிருந்தார்.  இது வஞ்சப்புகழ்ச்சி என்று கட்சியினரே முணுமுணுத்தனர்.

ய்ய்க்

வஞ்சப்புகழ்ச்சி ஓவர் டோஸ் ஆகிவிட்டது என்று நினைத்தாரோ என்னவோ,  ‘’சாதாரண விவசாயி குடும்பம் முதல் PSG மாணவர், 8 ஆண்டுகள் IPS வரை. TN BJP இன் துணைத் தலைவர் முதல் TN BJP தலைவர் வரை அவரது வளர்ச்சி கற்பனை செய்ய முடியாதது. திமுக இன்று அதிருகிறது. டெல்லி பாராட்டுகிறது. இளைஞர்கள் எங்கள் சகோதரருக்கு பின்னால் இருக்கிறார்கள். எப்படி வளர வேண்டும், எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் சிறந்த உத்வேகம்’’என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.  ஆனால், இதுவும் வஞ்சப்புகழ்ச்சிதான் என்கிறார்கள்.   ‘’எப்படி அரசியல் செய்ய வேண்டும்’’ என்பதற்கு அவர் சிறந்த உத்வேகம் என்று சொல்லியிருப்பது  தான் அடிபட்ட விசயத்தைதான் அப்படி சொல்கிறார் என்கிறார்கள்.

தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக இருந்தவர் காயத்ரி ரகுராம்.  காயத்ரி ரகுராமின் அந்த பதவியை பறித்துவிட்டு அந்த பதவியை பெப்சி சிவக்குமாருக்கு கொடுத்துவிட்டார்  அண்ணாமலை.  

க்ய்

அண்ணாமலை செய்த அரசியலைத்தான் இப்படி வஞ்சப்புகழ்ச்சியாக பாடிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ஆனால், அண்ணாமலையின் ஆதரவாளர்களோ,  தமிழக பாஜக தலைவராக எல். முருகன் இருந்தவரைக்கும் காயத்ரி ரகுராமுக்கும் அவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.  ஆனால் அண்ணாமலை தலைவராக வந்த பிறகு காயத்ரி ரகுராமுக்கும் அவருக்கும் இடையே சில மோதல்கள் நடந்தன.  


 கட்சியினருக்கு பல்வேறு பொறுப்புகள் இருந்தாலும் அனைத்து முடிவுகளையும் எடுப்பது தலைவர் தான்.   அப்படி இருக்கும்போது தலைவர் அண்ணாமலைக்கு தெரியாமல் அவரின் கவனத்திற்கு எதையும் கொண்டுவராமல் தனக்குக் கீழே இருந்த நிர்வாகிகளை  திடீரென்று நீக்கம் செய்து உத்தரவிட்டார் காயத்ரி ரகுராம். இது அண்ணாமலையின் கவனத்திற்கு வந்ததும்,  தலைமையின் உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு காயத்ரி ரகுராம் நீக்கியதால்,   நீக்கப்பட்ட அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து அவர்கள் முன்பு வகித்த பொறுப்பை வழங்கினார் அண்ணாமலை. 

க்ய்ய்

 இதனால் காயத்ரிக்கும் அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்தது .  இந்த நிலையில்தான் புதிய நிர்வாகிகள் பட்டியலில் காயத்ரி ரகுராம் பெயர் இடம்பெறாது என்று பலரும் சொல்லி வந்தனர்.  ஆனால் தன் பெயர் இருக்கும் என்று அடித்துச் சொல்லி வந்தார் காயத்ரி ரகுராம்.   ஆனால் புதிய நிர்வாகிகள் பட்டியலில் காயத்ரி ரகுராம் பெயரை நீக்கிவிட்டு அவர் வகித்து வந்த கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் பொறுப்பை பெப்சி சிவக்குமாருக்கு  கொடுத்துவிட்டார் அண்ணாமலை.   உடனே கடுப்பான காயத்ரி ரகுராம்,    ’’என்  ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி’’ என்று பதிவிட்டார். இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது .   இந்த நிலையில் அண்ணாமலையின் மீது இருக்கும் கடுப்பை அண்ணாமலை பிறந்த தினத்தில் அவரை புகழ்வது மாதிரி  வஞ்சப்புகழ்ச்சி செய்திருக்கிறார் என்கிறார்கள்.