ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்து விட்டு இமாச்சல பிரதேசம் செல்ல வேண்டும்.. காங்கிரஸ் எம்.பி.

 
ராகுல் காந்தி

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்திவிட்டு இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்துக்கு சென்று சட்டப்பேரவை தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரான்சிஸ்கோ சர்தினா தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. பிரான்சிஸ்கோ சர்தினா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்திவிட்டு இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்துக்கு சென்று (பிரச்சாரம் செய்து)  பொதுமக்களை எழுப்ப வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் பா.ஜ.க.வை தோற்கடிக்கக்கூடிய ஒரே கட்சிக்கு (காங்கிரஸ்) வாக்களிப்பார்கள். பா.ஜ.க.வுக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான்.

பிரான்சிஸ்கோ சர்தினா

சசி தரூர் எனது சக நிர்வாகி. நான் சந்திக்க நேர்ந்தால், எல்லோரும் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று தெரியும் என்பதால் நான் அதை கேட்டிருப்பேன். எனவே நீங்கள் 100 சதவீதம் தோற்க போகிறீர்கள் என்று உங்களுக்கு தெரிந்தால் என்ன பயன்?. நீங்கள் போட்டியிட்டதை மட்டும் காட்ட விரும்புகிறீர்கள். மல்லிகார்ஜூன் கார்கே வெற்றி பெறுவது உறுதி. புதிதாக ஒன்றும் இல்லை.

சசி தரூர்

இதற்கு முன் போட்டியின்றி தேர்தல்கள் நடந்துள்ளன. மேடம் சோனியா ஜி தலைவராக இருந்தார். ராகுல் ஜி தலைவராக இருந்தார். இப்போது தேர்தல்கள் உள்ளன. மல்லிகார்ஜூன் கார்கே காங்கிரஸின் புதிய தலைவராக வருவார் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு  புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் 12ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.