மோடியை இந்தியாவின் சிறந்த பிரதமர் என்று வர்ணிப்பதில் தவறில்லை.. பா.ஜ.க.வில் மனைவியுடன் இணைந்த குல்தீப் பிஷ்னோய்

 
கட்டார், ரேணுகா, குல்தீப், கஜேந்திர சிங்

ஹரியானா காங்கிரஸின் முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய் நேற்று தனது மனைவியுடன் பா.ஜ.க.வில் இணைந்தார். மேலும், மோடியை இந்தியாவின் சிறந்த பிரதமர் என்று வர்ணிப்பதில் தவறில்லை என்று தெரிவித்தார்.

ஹரியானா மாநிலம் அடம்பூர் சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய். இவர் அண்மையில் நடைபெற்ற ஹரியானா மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்காமல், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிகளின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களித்தார். இதனையடுத்து குல்தீப் பிஷ்னோயை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் காங்கிரஸ் நீக்கியது. இதனையடுத்து குல்தீப் பிஷ்னோய் பா.ஜ.க.வில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிகாரி பேசிய வார்த்தைகள் தவறுதான்.. ஆனால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கண்டிப்பு அவசியம்.. முதல்வர் மனோகர் லால் கட்டார்

இந்நிலையில் நேற்று முன்தினம் குல்தீப் பிஷ்னோய் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பா.ஜ.க.வில் இணைய போவதாக அறிவித்தார். பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உள்ளிட்ட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் குல்தீப் பிஷ்னோயும், அவரது மனைவி ரேணுகா பிஷ்னோயும் பா.ஜக.வில் இணைந்தனர். 

மோடி

குல்தீப் பிஷ்னோயை கட்சிக்குள் வரவேற்ற ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், குல்தீப் பிஷ்னோய் சேர்க்கை அமைப்புக்கு (கட்சிக்கு) உதவும். பிஷ்னோய் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை ஆதரித்து வருகிறார். சமீபத்திய மாநிலங்களவை தேர்தலிலன்போது, அவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும், பா.ஜ.க.வை  ஆதரித்தார் என தெரிவித்தார். பா.ஜ.க.வில் இணைந்த பிறகு பிஷ்னோய் கூறுகையில், மோடியை சிறந்த பிரதமர். நாடு மற்றும் ஏழைகளின் நலனை பற்றி எப்போதும் சிந்திக்கும் அவரை இந்தியாவின் சிறந்த பிரதமர் என்று வர்ணிப்பதில்  தவறில்லை என்றார்.