மூத்த தலைவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவது என்பது ராகுல் காந்திக்கு தெரியாது.. காங்கிரஸிலிருந்து விலகிய எம்.ஏ.கான்

 
எம்.ஏ.கான்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஏ.கான் காங்கிரஸில் இருந்து விலகினார், மூத்த தலைவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவது என்பது ராகுல் காந்திக்கு தெரியாது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தெலங்கானாவில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியும், மாநிலங்களவையின் முன்னாள் எம்.பி.யுமான எம்.ஏ. கான் கூறியதாவது: நான் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்தேன்.  கட்சி குழுவின் துணை தலைவர் பதவியை ராகுல் காந்தி கையாண்ட பிறகு நிலைமைகள் கீழ்நோக்கி செல்லத் தொடங்கின. தொகுதி மட்டத்திலிருந்து பூத் மட்டம் வரை எந்த உறுப்பினருடனும் பொருந்தாத வித்தியாசமான சிந்தனையை அவர்  (ராகுல் காந்தி) கொண்டிருக்கிறார். 

ராகுல் காந்தி

இதன் விளைவு காங்கிரஸின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. பல தசாப்தங்களாக கட்சியை பலப்படுத்திய கட்சியின் மூத்த உறுப்பினர்களும் கூட இப்போது வெளியேறும் நிலையை எட்டியுள்ளது. மூத்த  உறுப்பினர்களுடன் எப்படி நடந்து கொள்வது என்று அவருக்கு தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். குலாம் நபி ஆசாத்தை தொடர்ந்து மற்றொரு மூத்த தலைவர் காங்கிரஸிலிருந்து வெளியேறி இருப்பது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சூடு பிடிக்கும் கடித விவகாரம்….. குலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் காங்கிரஸ்காரர்கள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளிக்கிழமையன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சுமார் 50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பயணித்த குலாம் நபி ஆசாத் அந்த கட்சியிலிருந்து வெளியேறியது  அந்த  கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.