இந்தியாவிலேயே பென்ஷன் வாங்காத ஒரே ஒரு முன்னாள் எம்.பி.,

 
ஜ்

இந்தியாவிலேயே ஜோதி ஒருவர் தான் பென்ஷன் வாங்காத முன்னாள் எம்.பி., என பாராட்டியுள்ளார் ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர்.
அதே நேரம் முன்னாள் எம்பி ஜோதியால் ராஜ்யசபா தலைவருக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. 

 முன்னாள் எம் .பி. ஜோதி வழக்கறிஞர்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்குகளை முன் நின்று நடத்தி பல வழக்குகளில் வெற்றி பெற்றவர்.  சசிகலா, ஜெயலலிதா உடன் ஏற்பட்ட பிரச்சனையால் திமுகவில் இணைந்து இப்போது அரசியலில் இருந்தே ஒதுங்கி வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார்.

ஜொ

 பென்ஷன், இலவச ரயில் பயணம் போன்ற சலுகைகளை உயர்த்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற எம்பிக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் முன்னாள் எம்.பி. ஜோதி தன் பதவிக்கான ஓய்வு ஊதியத்தை வாங்க மறுத்து வருகிறார் . அது மட்டுமல்லாமல் அவருக்கு கிடைக்கும் ரயில் பயண சலுகைகள், மருத்துவ சலுகைகள் என்று எதையுமே அவர் பெற்றுக் கொள்ளவில்லை.  இது ராஜ்யசபா அலுவலகத்தில் பிரச்சனையாக வெடித்து இருக்கிறது.

 பல ஆண்டுகளாக ஜோதியின் பென்ஷன் பணம் அதிகமாக சேர்ந்து இருப்பதால் இதை என்ன செய்வது என்று அதிகாரிகள் திண்டாடி வருகின்றார்கள்.  இந்த விவகாரம் ராஜ்ய சபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   இதை கேட்டு ஆச்சரியப்பட்ட தர்கர்,   இந்தியாவிலேயே ஜோதி ஒருவர் தான் பென்ஷன் வாங்காத முன்னாள் எம்பி என்று பாராட்டி இருக்கிறார்.  

 மேலும்,  இந்த விவகாரத்திற்கு என்ன தீர்வு என்று  அவர் கேட்க இந்த,   பணத்தை அரசிடம் வழங்க ராஜ்ய சபாவில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   விரைவில் அது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.